நீ ஒன்னும் பிக் பாஸ் இல்ல..நான் என்ன சாப்பிடணும்னு நீ சொல்லாதே.. மகேஷ்வரியிடம் எகிறிய அசிம்!

சென்னை : பிக் சீசன் 6 ஆரம்பித்த இரண்டு நாளிலே டீ குடிப்பதில் சண்டை ஏற்பட்டு விஜே மகேஷ்வரியிடம் அசிம் சண்டையிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொடக்கி வைத்தார். இதில், கடந்த முறைபோல் இல்லாமல் ஓரளவுக்கு நமக்கு தெரிந்த முகங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஜி.பி.முத்து, அசல் கோளார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், முகம்மது அஸீம், ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், மணிச்சந்திரா, விஜே கதிரவன், குயின்ஸி, மாடல் நிவாஷினி, தனலட்சுமி, விக்ரமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமான இருவாரத்திற்கு பிறகே கடுமையான டாஸ்க் கொடுக்கப்படும் ஆனால், இந்த முறை முதல் நாளே கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கிச்சன் டீம், வாஷிங் டீம், கிளினிங் டீம், பாத்ரூம் டீம் என நான்கு டீம்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

என்னடா டாஸ்க் இது

என்னடா டாஸ்க் இது

அதில், கிச்சன் டீமில் உள்ள நபர்கள், ஹவுஸ் மேட்ஸ் கேட்டால் உணவை ஊட்டி விட வேண்டும். அதுபோல், பாத்ரூம் டீமில் உள்ளவர்கள், ஹவுஸ் மேட்ஸுக்கு பாத்ரூம் வந்தால் சிகப்பு கம்பளம் விரித்து பாத்ரூம் வரை அழைத்து சென்றுவிட வேண்டும். அதேபோல கிளினிங் டீம் மெத்தயை விதவிதமாக அலங்கரித்து வைக்க வேண்டும் என முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏடாகூட மாஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

டீயில் ஆரம்பித்த சண்டை

டீயில் ஆரம்பித்த சண்டை

டாஸ்க் தொடங்கி உள்ளதால் போட்டியாளர்கள் தங்கள் ஆட்டத்தை ஆடதொடங்கி உள்ளனர். வழக்கமாக சாப்பாட்டில் இருந்துதான் பிரச்சனை ஆரம்பிக்கும் அதே போல இந்த முறை டீயில் இருந்து பிரச்சனை தொடங்கி உள்ளது. டீ பிரியரான அசிம் டீ வேண்டும் என கேட்க, மகேஷ்வரி இப்போது டீ கொடுக்க முடியாது எல்லாரும் எப்போ டீ குடிக்கிறாங்களோ அப்போது தான் டீ போடுவேன் என சொல்கிறார்.

நீ என்ன பிக் பாஸா

நீ என்ன பிக் பாஸா

இதனால்,கடுப்பான அசிம் நீ என்ன பிக் பாஸ் மாதிரி பேசுற, நான் என்ன சாப்பிடனும்னு நீ சொல்லக்கூடாது எனக்கு இப்போ பசிக்கிது இப்போ எனக்கு டீ வேணும் என மகேஷ்வரியிடம் எகுறுகிறார்.ஆனால், மகேஷ்வரியோ தினமும் காலையில் ஒருமுறை, மாலை ஒருமுறை மட்டும்தான் டீ மற்ற நேரத்தில் டீ கிடையாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இதனால், சிறிது நேரம் பிக் பாஸ் வீடு ரணகளமாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X