Bigg Boss 7: என்னடா நடக்குது அங்க.. ஸ்மோக்கிங் ரூமில் கசமுசா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் காதல் புறாவாக சுற்றி வரும் ஐஷூவும், நிக்சனும் ஸ்மோக்கிங் ரூமில் ரொமான்சாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் நிகழ்ச்சி ஆரம்பத்தில் மணி - ரவீனா இருவரும் ஜோடியாக சுற்றி வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டினார்கள்.

இருவரும் எப்போதும் ஜோடி போட்டு சுற்றிக்கொண்டு இருந்தால், விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து தற்போது ரொமான்சை குறைத்துக்கொண்டார்கள்.
பிக் பாஸ் கிசு கிசு: மணி - ரவீனாவைத் தொடர்ந்து தற்போது காதல் கிசு கிசுவில் சிக்கி இருப்பது நிக்சன் - ஐசு தான். ஐஷு முதலில் மணி இடம் நெருக்கமாக பழகினார்.ஆனால், ரவீனா எப்போதும் மணியுனே இருந்தால், இது நமக்கு சரிப்பட்டு வராது என்று நிக்சனிடம் பழக ஆரம்பித்தார். இதனால், இப்போதும் இவர்கள் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர்.
போன வாரம் நிக்ஸனும், ஐசுவும் போனை கழட்டிவிட்டு கண்ணாடியில் முத்தம் கொடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இவர்கள் இருவரின் செயலை கழுவி ஊற்றினார்கள்.
ஸ்மோக்கிங் ரூமில் கசமுசா: தற்போது இருவரும் ஸ்மோக்கிங் ரூமுக்குள் ஒன்றாக சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது சர்ச்சையில் கிளப்பி உள்ளது. ஸ்மோக்கிங் ரூமில் கேமரா கிடையாது என்பதால் அவர்கள் பேசுவது மட்டுமே அந்த வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் பேசும்போது இடையே சில சத்தங்களும் கேட்கிறது.
என்னடா நடக்குது அங்க: இதைக்கேட்ட நெட்டிசன்கள் ஸ்மோக்கிங் ரூமில் கசமுசாவா என்றும், முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள் என்றும், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரின் சத்தம் தான் என மாறி மாறி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் என்னடா நடக்குது பிக் பாஸ் வீட்டில் என கேட்டு இருவரையும் கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











