என்னது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா.. ரெட் கார்டை வைத்தே தரமான பதிலடி கொடுத்த பிரதீப்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து தன்னை வெளியேற்றிய கமலுக்கு பிரதீப் ஆண்டனி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், வைல்டு கார்டு மூலம் தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்ன பாரதி என 5 புதிய போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

சீசன் தொடங்கி 35 நாட்களை நெருங்கி வரும் நிலையில் இனிமேல் நிறைய டபுள் எவிக்ஷனுக்கு வாய்ப்புண்டு என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

bigg boss season 7: pradeep antony reply to kamal haasan with red card

ரெட் கார்டு: இதையடுத்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் சீசன் 7: பிக் பாஸ் வீட்டில் இருந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை, அவர் பெண்களை ஆபாசமாக பேசுகிறார், கெட்ட வார்த்தை பேசுகிறார் என்று அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர். அதற்கு பிரதீப் பதிலளிக்க கூட வாய்ப்பு கொடுக்காமல் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். அவரின் இந்த முடிவு சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது.

நியாயமே இல்லை: பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும் நெட்டிசன்கள் பலரும், பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது மிகவும் தவறான விஷயம். ஒரே நாளில் எப்படி இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைத்தார்கள். நிக்சன், ஐஷு-விடம் வரம்பு மீறி நடந்து கொள்வது யார் கண்ணுக்கும் தப்பா தெரியவில்லையா என இணையத்தில் நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தரமான பதிலடி: இந்நிலையில், பிரதீப், பிக்பாஸ் வீட்டில் தன்னால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி வெளியேற்றிய கமலுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் பிரதீப்பை சுற்றி பெண்கள் நிற்க, கமல் கொடுத்த ரெட் கார்டை கையில் வைத்துக் கொண்டு செம்ம ஹாப்பியாக போஸ் கொடுத்துள்ளார் பிரதீப். என்னால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைனு சொன்னவர்களுக்கு பெண்கள் சுற்றி நிற்க போஸ் கொடுத்து சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் பிரதீப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X