Bigg boss: வல்லவன்? மன்மதன்.. நீ ஒரு பிளேபாய்டா.. அய்யோ நான் அப்படி இல்ல.. கதறி அழுத விஷால்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 93 நாட்களை கடந்த நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களான ரவிசந்திரன், அர்னவ், ரியா, சுனிதா, வர்ஷினி, தர்ஷா குப்தா, சிவக்குமார், சாச்சனா ஆகியோர் உள்ளே வந்தனர். அவர்கள் அனைவரும் விஷால், பெண்களிடம் காதல் நாடகமாடி அவர்களை வெளியே அனுப்பிவிட்டார் என்று குற்றம்சாட்டினார்கள் இதனால், விஷால் கதறி அழுதார்.
பிக் பாஸ் வீட்டிற்குள்ளே வந்த தர்ஷா குப்தா, விஷாலை பார்த்து காதல் நாடகம் ஆடி பெண்களை ஏமாற்றி வெளிய அனுப்பி விட்டீர்கள். அதற்காக என்றே ஒரு தனி ஸ்டேட்டர்ஜி வைத்திருக்கிறீர்கள் என்று கூறினார். அதன் பின் பேசிய சுனிதாவும் விஷால் மீது, அதே குற்றச்சாட்டை வைத்தார். இதையடுத்து, சுனிதாவை தனியாக அழைத்து பேசிய விஷால், வெளியில் என்ன நடக்கிறது என்றார். அப்போது, சுனிதா நீ தர்ஷிகா மற்றும் அன்ஷிதா இருவரிடமும் நட்பாக பழகினாயா? இல்லை காதலா? என்று கேட்டார். அதற்கு விஷால், நான் நட்பாக தான் பழகினேன் என்று கூறினார். அப்போது சுனிதா, அவர்கள் நன்றாக விளையாடினார்கள், ஆனால், நீ காதல் என்று சொல்லி அவர்களை வெளியில் அனுப்பிவிட்டாய் என்று தான் வெளியில் இருந்து பார்க்கும் போது தெரிகிறது என்றார்.

வல்லவனா, மன்மதனா: அடுத்து பேசிய அர்னவ், விஷாலுக்கு இரண்டு பெண்களுடன் காதல் ட்ராக் சென்று கொண்டிருந்தது. இருவர் மீதும் காதலா என்று கேட்டார். அதற்கு விஷால், அதை நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி காதல் இருந்தால் நான் உங்களுக்கு பத்திரிக்கை வைத்து அழைக்கிறேன் என்றார். இது என்னுடைய கேள்வி இல்லை வெளியில் மக்கள் அனைவரும் கேட்கிறார்கள். எனக்கு நீங்கள் பட்ட பெயர் வைத்தீர்கள் நான் உங்களுக்கு வல்லவன், மன்மதன் என்று பெயர் வைக்கிறேன் என்றார்.
கதறி அழுத விஷால்: இதை தொடர்ந்து விஷால் இடம் பேசிய சாச்சனா, தர்ஷா மற்றும் அன்ஷிதா வெளியே சென்றதற்கு நீ தான் முக்கிய காரணம். என்னுடைய அண்ணன் ஒரு பிளேபாயாக இருப்பான் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பினார். இதனால் மனம் உடைந்து போன விஷால், புல்தரையில் படுத்துக்கொண்டு கதறி அழுதபடி, தர்ஷிகா, அன்ஷிதா இருவரும் என்னை மன்னித்து விடுங்கள், இருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அது என் மூலமாக கெட்டிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அழுதுக்கொண்டே இருந்தார். அப்போது அங்கு வந்த ஜாக்குலின் மற்றும் முத்து இருவரும் அவரை சமாதானப்படுத்தினார்கள்.


Click it and Unblock the Notifications











