Bigg Boss: பெண்களை தடவி, நோண்டு ஜெஃப்ரி.. மோசமான சைகை காட்டிய அர்னவ்.. கடுப்பான ஹவுஸ்மெட்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள், வெளியே சென்ற போட்டியாளர்கள் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். அந்த வகையில், வீட்டுக்குள் வந்த அர்னவ், வரம்பு மீறினார். இதனால், அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து இந்த வீட்டுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அந்த மரியாதையுடன் பேசுங்கள் என்றனர். இதனால், வீட்டில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இரண்டு வாரங்களே எஞ்சி இருக்கும் நிலையில், தற்போது தான் இந்த நிகழ்ச்சி களை கட்டி உள்ளது. இதில், ஆண் போட்டியாளர், பெண் போட்டியாளர் என தனித்தனியாக இருந்த நிலையில் அதில், சுவாரஸ்யமே இல்லாததால், அனைவரையும் ஒரே அணியாக மாற்றப்பட்டனர் .

வரம்பு மீறி பேசிய அர்னவ்: நேற்றைய எபிசோடில், வைல்ட் கார்டு மூலம் முன்னாள் போட்டியாளரான அர்னவ் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக அனைவரின் கண்ணிலும் விரல் விட்டு ஆட்டப்போவதாகவும், அதற்காகத்தான் மீண்டும் வந்தேன் இதையடுத்து, அனைவர் முன் பேசிய அர்னவ், இப்போவே என்னிடம் கேள்வி கேட்க வேண்டுமென்றால் கேட்டு விடுங்கள் நான் பேசும்போது கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல மாட்டேன் என்றார்.
அப்போது ரியா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன பிறகு, விஜய் சேதுபதி சாரிடம் சென்று அனைவரும் ஜால்ரா என்று கோவமாக பேசியிருந்தீர்கள், அதை உள்ளே இருக்கும் போதே, பேசி இருக்கலாமே என்றார். அதற்கு பதில் அளித்த அர்னவ், வீட்டில் இருக்கும்போது பல பட்டத்தை கொடுத்தார்கள். அதற்கு பதில் கொடுப்பதற்குள் நான் இந்த வீட்டில் இருந்து சென்று விட்டேன். அதனால் அந்த இடத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன் என்றார்.
காது கூசம் பேச்சு: இதையடுத்து பேசிய, அர்னவ். சட்டை போடாமல் ஒருவன் வீட்டில் சுற்றிக்கொண்டு இருப்பானே சத்யா அவன் எங்கே என்றார். அதற்கு, முத்து இப்படி எல்லாம் பேசாதீங்க என்று கூறிய போதும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல். அதேபோல ஒருத்தன் நோண்டிக்கிட்டு தடவிக்கிட்டு இருப்பானே என்று காது கூசும் அளவிற்கு ஜெப்ரியை பற்றி பேசினார். இதற்கு வீட்டில் இருந்தவர்கள் அனைவரும், இந்த இடத்திற்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அதை மனதில் வைத்துக்கொண்டு பேச வேண்டும். யாரையும் மரியாதை இல்லாமல் பேசாதீர்கள், என்றார். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, நீங்கள் அதை ஜெஃப்ரி என்று நினைத்துக்கொண்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்று சமாளித்தார்.
வாயை பொத்து: தொடர்ந்து பேசிய அர்னவ், இந்த வீட்டில் இருக்கும் ஜால்ராஸ் அருண் மற்றும் விஷால் அவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்ட வந்திருக்கிறேன் என்றார். அப்போது, வர்ஷினி, எதற்காக வேண்டுமானாலும் நீங்கள் வந்து இருக்கலாம். ஆனால், மேனர்ஸோடு பேச வேண்டும் என்று சொல்ல, எனக்கு எல்லாம் தெரியும் வாயை பொத்து என்பது போல, சைகையால் காட்ட, ஹவுஸ் மேட் அனைவரும் கடுப்பாகி இப்படி பேசுவது சரியல்ல என்று எழுந்து சென்றுவிட்டனர். இதை டிவியில் பார்த்த பிக் பாஸ் பிரியர்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய்சேதுபதி அவர்கள், அர்னவ் பேசியதை கண்டிக்க வேண்டும் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











