லவ்னு வேஷம் போட்டு விஷால் ஏமாத்திட்டான்.. நான் மொக்க மூஞ்சியா? கண் கலங்கிய பிக் பாஸ் தர்ஷிகா!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் எந்த அளவிற்கு சண்டை இருக்கிறதோ, அதே போல, காதல், கிசுகிசு இருக்கும். அந்த வகையில் இந்த பிக் பாஸ் 8 சீசனில் விஷால், தர்ஷிகா இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்ஷிகா, லவ்னு வேஷம் போட்டு விஷால் தன்னை ஏமாற்றி விட்டதாக கண் கலங்கி பேசி உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய திறமையை நிரூபிக்க போராடி வருகின்றனர். கடந்த வாரம் நடந்த செங்கல் டாஸ்கில் சரமாறிய தள்ளுமுள்ளு நடைபெற்றது. தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர்.

bigg boss season 8 vj vishal tharshika 8

பிக் பாஸ் சீசன் 8: இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷிதா பேட்டி அளித்துள்ளார். அதில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு நிறைய மனவலியாக இருந்தது. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நான் ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளராக இருந்திருந்தேன். என்னை விளையாட்டில் அடிக்க முடியாது என்பதால், பாசத்தை காட்டி அடித்துவிட்டார்கள். என்னுடைய பாசம் வேஷம் கிடையாது. ஆனால், வெளியே வந்த பிறகு தான் உள்ளே என்னை நம்ப வைத்து ஏமாற்றினார்கள் என்பது தெரிந்தது. எவ்வளவுத்தான் ஜாக்கிரதையான இருந்தாலும், யானைக்கும் அடி சருக்கும் என்று சொல்வது போலத்தான் ஆகிவிட்டது என்றார். மேலும், நான் ஒரு நடிகையாகத்தான் நான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றேன். ஆனால், அந்த வீட்டிலேயே என்கிட்ட நடித்த சிறந்த நடிகர் விஷால் தான்

நான் மொக்க மூஞ்சியா: வீட்டுக்குள் இருக்கும்போது பவித்ரா, நிறைய முறை சொன்னார். நானும் அவள் சொன்னதை கேட்டு, அதை யோசித்து இது சரியில்லை என்று என் விளையாட்டை விளையாட ஆரம்பிக்கும் போது தான் வெளியே வந்துவிட்டேன். விளையாட ஸ்கூல் டாஸ்க் இல்லை என்றால் கண்டிப்பாக நான் இன்னும் பிக் பாஸ் வீட்டில் இருந்திருப்பேன். லவ் கண்டன்டு சொல்றாங்க அப்படியெல்லாம் இல்லை, அது தானாகவே நடந்தது அமைந்தது. அது கண்டன்ட் இல்லை. விஷால், என்னை மொக்க மூஞ்சி என்று சொன்னது எல்லாம் நான் வெளியில் வந்து தான் பார்த்தேன். அதே விஷால் நான் வீட்டுக்குள் இருக்கும்போது அழகாக இருக்கேனு பலமுறை சொன்னார். என் முகத்திற்கு முன்னால் ஒன்று சொல்லி, எனக்கு பின்னால் நிறைய பேசி இருக்கிறார். எது உண்மைனு எனக்கு தெரியல. அதை விஷால் பேசாமல் இருந்து இருக்கலாம், அவர் பேசியதற்காக நான் அப்படி ஆகிவிடமாட்டேன்.

விஷால் மீது காதல்: அழகு என்பது முகத்தில் இல்லை, மனசு அழகாக இருந்தா போதும், வெளிப்படையாக சொல்வது தான் அழகு. எனக்கு விஷால் மீது காதல் உண்மை தான். விஷாலை பிடிக்கும். அதை நான் ஒத்துக்கொள்வதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை. நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும்போது, உங்க பாசத்தை மதிக்கிறேன் என்று சொன்னார். விஷால், அப்படி ஏன் அவர் சொன்னார்? என்று இப்போது வரை எனக்கு புரியவில்லை. ஒரு வேலை அவருக்கு என் மீது காதல் இல்லாமல் இருந்து இருக்கலாம், இல்லை அதற்கான இடம் இது இல்லை என்று கூட நினைத்து இருக்கலாம் என்று தர்ஷிகா கண் கலங்கி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X