Bigg Boss 8: ஒரே வீட்டில் இருந்த அர்னவ், அன்ஷிதா.. பிக் பாஸூக்கு பின் எல்லாமே மாறிப்போச்சு!

சென்னை: சீரியல் நடிகர் அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இருவரும் பிரிவதற்கு காரணமாக இருந்தவர் அன்ஷிதா என கூறப்படுகிறது. செல்லம்மா சீரியலில் அர்னவும், அன்ஷிதாவும் இணைந்து நடந்த போது இருவரும் நெருங்கி பழகி வருவதாக திவ்யா ஸ்ரீதர் குற்றம் சாட்டியிருந்தார். அதன்பின் அர்னவிற்கும் திவ்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது சண்டையாக மாறி கடைசியில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிகள் அர்னவும் அன்ஷிதாவும் ஜோடியாக கலந்து கொண்டனர். ஆனால், தற்போது இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 8ல் முத்துக்குமார் டைட்டிலை பெற்றார். இரண்டாவது இடம் சௌந்தர்யா, மூன்றாவது இடத்தை விஷால் பெற்றனர். இதை எடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, அன்ஷிதாவிடம் வெளியில் சென்றதும் முதல் வேலையாக என்ன செய்தீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அன்ஷிதா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த மூன்றாவது வாரத்திலேயே என்னுடைய வாழ்க்கை நன்றாக மாறிவிட்டது.

bigg boss season 8 arnav anshita

பிரேக் அப் செய்தேன்: இந்த நிகழ்ச்சிக்கு நான் வரும் போது வெளியில் என்னை ஒருவர் காயப்படுத்தினார் அவரிடம் நான் கெஞ்சி இருக்கிறேன்.. அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்தேன். ஆனால், பிக் பாஸ் வீடு என்னை மிகவும் யோசிக்க வைத்தது. வெளியில் சென்றதும் முதலில் அந்த நபரை சந்தித்து, உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று பிரேக் அப் செய்து விட்டேன். ஆனால், அவர் அப்போது கூட தன்னுடைய புதிய கேர்ள் பிரண்டுடன் சந்தோஷமாகத்தான் இருந்தார். அதைப்பற்றி நான் கவலைப்படவே இல்லை, இந்த பிக் பாஸ் வீடு அன்ஷிகாவை என்னிடம் கொடுத்திருக்கிறது. அதற்கு மிகவும் நன்றி என்றார். அன்ஷிதா இவ்வாறு பேசிக் கொண்டிருக்க, அனைவரும் அன்ஷிதா யாரைப்பற்றி பேசுகிறார் என்று குழம்பிக்கொண்டு இருக்க, கேமரா ஜூம் போட்டு அர்னவை காண்பித்ததால், அன்ஷிதா கூறியது அர்னவை பற்றித்தான் என்ற பேச்சு இணையத்தில் எழுந்தது.

ஒரே வீட்டில் இருந்தனர்: ஆனால், இது குறித்து அர்னவ் மற்றும் அன்ஷிதாவின் நண்பர்களிடம் கேட்டபோது, அர்னவ், திவ்யாவை பிரிந்த பிறகு, அன்ஷிதாவும் அர்னவும் தனியே வீடு எடுத்து ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வந்தார்கள். விவாகரத்து வழக்குக்காக அர்னவ் வந்த போது கூட, அவருடன் உடன் அன்ஷிதா வந்திருந்தார்.

இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் வரை ஒன்றாகத்தான் இருந்தார். அன்ஷிதா எப்போதுமே அர்னவிக்கு ஆதரவாகத்தான் இருந்தார். ஆனால், பிக் பாஸ்க்கு பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை என்றனர். இப்போது, செல்லம்மாள் சீரியல் முடிந்துவிட்டதால், அர்னவிற்கு எந்த வாய்ப்பும் வரவில்லை. ஆனால், அன்ஷிதா குக் வித் கோமாளியில் கோமாளியாக வந்திருந்தார். அவர் தான் பிக் பாஸ் வாய்ப்பை அர்னவிற்கு வாங்கி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அர்னவிடம் அன்ஷிதா யாரைப்பற்றி பேசினார் என்று கேட்டால், அதற்கு அவர், அவர்களில் பர்சனல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X