ஜெஃப்ரி டபுள் ஏஜண்டா இருக்கான்.. கொளுத்திப்போட்ட தீபக்.. ஆனால், நடந்ததே வேற!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8ன் முதல் வாரத்தின் இறுதி நாளான நேற்று விஜய் சேதுபதி மாஸ் என்ட்ரி கொடுத்து அனைத்து போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சி சுவாரசியமாக நடந்து முடிந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியிலும் கலக்கி வருகிறார்.
இதில் வெளியில் இருந்து மீண்டும் உள்ளே வந்த சாச்சித்தாவிடம் பெண்கள் அணியில் உள்ள மூன்று போட்டியாளர்கள் வீக் போட்டியாளர்கள் என்றீர்கள். ஆனால், அதனை ஏன் பெண்கள் அணியில் கூறவில்லை. ஆனால், ரவிந்தர் இடம் மட்டும் கூறியது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து கடுப்பான சுனிதா, யூனிட்டி மண்ணாங்கட்டி சென்று சொல்லிவிட்டு, ஆண்கள் அணியிடம் இதை சொல்லி இருக்கிறார், என்னிடம் சொல்லி இருக்கலாம் அதைவிட்டு விட்டு ஏன் அங்கே சொன்னார் என்று கண்கலங்கினார்.

பவித்ரா செய்த வேலை: பின், பவித்ராவை ஆண்கள் டீமுக்கு அனுப்ப காரணம் என்ன என்று தர்ஷிதாவிடம் கேட்டார். அதற்கு அவர், என் தோழி என்பதால் அப்படி செய்யவில்லை, அனைவரும் அவர் செல்லவேண்டும் என்ற நினைத்தனர் என்றார். தொடர்ந்து வீட்டிற்குள் நடந்த பிராங்க் குறித்து பாவித்ராவிடம் கேட்க அவர், ஆமாம் சார் அவர்கள் பேசிக்கொண்டது எனக்கு தெரியும் ஆனால், நான் பெண்கள் டீமில் இதை சொல்லவில்லை, பிராங்க் சுவாரசியமாக இருந்ததால் சொல்லவில்லை என்றார்.
டபுள் ஏஜெண்ட்: இதையடுத்து, ஆண்கள் டீமில் யார் உண்மையாக இல்லை என்று தெரிகிறது என்று கேட்க, தீபக் எழுந்து, ஜெஃப்ரி டபுள் ஏஜண்டா இருக்கான்.. எப்போதுமேன அங்கேயே தான் இருக்கான், ஆனால், அங்கு நடப்பது எதையும் இங்கு சொல்வது இல்லை என்று விஜய்சேதுபதியிடம் கொளுத்திப்போட்டார் தீபக். இதுகுறித்துப் பேசிய, ஜெஃப்ரி, தீரன் அதிகாரம் ஒன்னு படத்தில் வரும் 'மே பேவகு' என்ற டையலாக்கை சொல்லி விஜய் சேதுபதியை சிரிக்க வைத்தார்.
அனைவரும் என்னிடம் கவலையாக இருந்தால் வாடா பேசலாம் என்று சொல்லுவார்கள். இதனால் தான் சார் நான் அங்கே போகிறேன். கடைசியில் கரம் மசாலா தந்து காரமா மாட்டிக்கொண்டேன் என்று ஜெஃப்ரி நகைச்சுவையோடு பேசினார்.


Click it and Unblock the Notifications











