“Will You Marry Me?” விஷ்ணுவிடம் சௌந்தர்யா சொன்ன அந்த வார்த்தை!
சென்னை: வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு தான் போட்டியாளர்களுக்கு இடையே காதல் வரும். ஆனால், இந்த சீசன்ல வெளியில இருக்கும்போதே பல போட்டியாளர்கள் காதல் வயப்பட்டு தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து இருக்கிறார்கள். நடிகர் விஷ்ணுவை சௌந்தர்யாவும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், சௌந்தர்யா லவ் ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க.
பிக் பாஸ் சீசன் எட்டு நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் டைட்டிலை யார் வெல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. இதில், முத்து அல்லது ஜாக்லின் டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குடும்பத்தினர் சந்திப்பு: தற்போது பிக் பாஸ் வீட்டில், குடும்பத்தினரை சந்திக்கும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில், முதலாவதாக, தீபக்கின் மனைவி மற்றும் அவரது மகனும் அவர் தூங்கிக்கொண்டு இருக்கும் போது சர்ப்ரைஸாக வந்தனர். அவர்களைப் பார்த்த தீபக் கதறி அழுதார். இதைத்தொடர்ந்து, முத்துக்குமரனின் அம்மா, அப்பா, ராணாவின் பெற்றோர், மஞ்சரியின் மகன் என அனைவரும் நேற்று வந்தனர். அதே போல, அன்ஷிதாவின் அண்ணன் மற்றும் அம்மா வந்திருந்தனர். மேலும், ஜாக்குலினின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து, வீட்டில் ஜாக்குலின் அழவே மாட்டா, ஆனால்,இங்கே அழுகிறாள் என்று கூறினார்.
Will You Marry Me?: இன்றைய எபிசாேடுக்கான ப்ரமோ காலையில் வெளியானது. அதில், பிக் பாஸ் வீட்டிற்குள் சௌந்தர்யாவின் காதலர் என்று சொல்லப்படும் விஷ்ணு வந்துள்ளார். அதில், செளந்தர்யாவை ஒரு தட்டில் , “Will You Marry Me?” எழுதி அதை விஷ்ணுவிடம் காட்டுகிறாள். இதைப்பார்த்து ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கத்தி கூச்சலிட்டு, விசில் அடித்தனர். அதற்கு விஷ்ணு, “லவ் யூ டூ. இந்த மாதிரி என் லைஃப்ல நடந்ததே இல்ல. எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னாேட பெஸ்ட் ஃப்ரெண்ட் என்று கூறி, தனக்கு அனைத்துமே மறந்து விட்டது, நான் உன்னை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு வந்தா, நீ என்னை சர்ப்ரைஸ் பண்ணிட்டியே என்கிறார். முன்னாள் போட்டியாளரான விஷ்ணு தான் சௌந்தர்யாவிற்கு இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications