Bigg Boss season 8: எவிக்டான ஃபேட் மேன்.. வெளியே வந்ததும் செய்த வேலை இருக்கே.. ஏம்மாடி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்த தயாரிப்பாளர் ரவீந்தர் எவிக்டாகி வெளியேறி உள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.
சுனிதா, ரவீந்தர், சத்யா, ரஞ்சித், ஜாக்குலின், தீபக், ஆனந்தி, முத்துக்குமரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷா குப்தா, விஜே விஷால், அருண் பிரசாந்த், ஜெஃப்ரி, சாச்சனா, அர்னவ், அக்ஷிதா, தன்ஷிகா, பவித்ரா ஜனனி என மொத்தம் 18 போட்டியாளர்ளுடன் அக்டோபர் 6ம் தேதி நிகழ்ச்சி தொடங்கிய போது யாரும் எதிர்பாராத அதிரடியாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டு சாச்சான வெளியேற்றப்பட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

6 பேர் நாமினேஷன்: இதையடுத்து இந்த வாரத்திற்குகான நாமினேஷன் நடந்தது இதில் ரவீந்தர், அருண், ஜாக்குலின்,முத்துக்குமார், சௌந்தர்யா உள்ளிட்ட ஆறு பேர் இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். இதில் குறைந்த வாக்குகளை பெற்று ரவீந்தர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். முதல் வாரத்திலேயே போட்டியை நன்றாக புரிந்து அழகாக காய்களை நகர்ந்தி விளையாடி பேட் மேன் வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இனிவரும் காலத்தில் கொடுக்கப்படும் டாஸ்க்களை நிச்சயம் அவரால் செய்ய முடியாது என்பதால், இப்போது வெளியேறியதே சரியானது தான் என்று சொல்லப்படுகிறது.
வெச்சு செய்த ஃபேட்மேன்: இதைத்தொடர்ந்து வெளியே வந்த ரவீந்தர், நல்ல வேலை என்னை சாப்பாடு போடம ஒல்லி ஆக்கிடுவார்கள் என்று நினைத்தேன் என்னை காப்பாற்றி விட்டீர்கள் என்றார். இதைத்தொடர்ந்து, நேற்றை நிகழ்ச்சி சூப்பராக இருந்து, நன்றாக தொகுத்து வழங்குனீர்கள் என்று விஜய் சேதுபதியை பாராட்டினார். இதைத்தொடர்ந்து உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர் குறித்து பேசிய அவர், அர்னவ் நீ சுத்த பேக், தயவு செய்து உண்மையாக இரு என்றார். இதைத்தொடர்ந்து ரஞ்சித் குறித்து பேசிய ஃபேட் மேன், நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கு இதில் வந்து தங்கம்,செல்லம்,சாமி எல்லாம் எதுக்கு போய் விளையாடுங்க சார் என்றார். இப்படி ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தனித்தனியாக விமர்சனம் செய்து அனைரையும் வியப்பில் ஆழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











