ரைட்டு சைத்தான் சைக்கிளில் வருது.. கூட்டத்தில் வாயை விட்ட அர்னவ்.. தெறிக்கவிடும் சுனிதா!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே குழாய் அடி சண்டை நடக்கத்தான் செய்யும் இருந்தாலும், வீட்டிற்குள் வந்த இரண்டாவது நாளே இப்படியா என்று நினைக்க வைத்துவிட்டது நேற்றைய எபிசோடு. தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

காலையில் வெளியான முதல் ப்ரோமோவில். ரவீந்தர், இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் ரூல்ஸ் புக்கை வாசிக்கிறார். இதில், இந்த வார வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் என்பதற்கான நாமிஷேன் நடக்கும் என்கிறார்.இதையடுத்து, விஜே விஷால், இந்த வாரம் பெண்கள் டீமில் இருந்து ஒருத்தர் போவார் என்று நினைக்கிறேன் என்றார். அடுத்ததாக பேசிய தர்ஷா, இந்த வாரம் ரவீந்தர் போவார் என்று நினைக்கிறேன். ஏன் என்றால், அவர் விளையாட்டில் ட்விஸ்ட் செய்கிறார் என்றார். இதையடுத்து, வந்த தீபக், ஜாக்குலின் ஒன் மேன் ஷோ மாதிரி நினைத்து விளையாடி வருகிறார் என்று அவரை நாமினேட் செய்தார். இதைத்தொடர்ந்து வந்த சத்யா, தர்ஷிதா,சுனிதா என அனைவரும் ரஞ்சித்தை நாமினேஷன் செய்தனர்.

bigg boss tamil bigg boss season 8 promo 8

இரண்டாவது ப்ரோமோ:இதையடுத்து, தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் சொளந்தர்யா இந்த வாரம் யார் வெளியில் போவார்கள் என்று பேச்சு வருகிறது. அதற்காகத்தான் நான் அனைவரையும் அழைத்தேன் என்று சொல்ல, கடுப்பான அர்னவ், அதை நீ தனியாக வந்து பேசி இருக்கலாமே அதற்காக எல்லாரையும் ஏன் அழைத்து பேச வேண்டும் என்று கேட்க, கூட்டத்தில் அனைவரும், கத்திக்கொண்டு இருக்கும் போது, நான் பைத்தியக்காரி மாதிரி கத்திக்கொண்டு இருக்க முடியாது, எந்த நேரத்தில் பேச வேண்டுமோ அந்த இடத்தில் தான் நான் பேசுவேன் என்று சௌந்தர்யா சொல்ல, மேலும், டென்ஷனான அர்னவ் இதில் அனைவரின் கருத்தும் வேற என்றார்.

கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்: அப்போது, நீங்க அனைவரும் பேசுவது போல எனக்கு தெளிவாக பேசத் தெரியாது என்று மீண்டும் சௌந்தர்யா சொல்ல, அங்கு அமைதியாக அமர்ந்து இருந்த சுனிதா, என்னது உனக்கு பேசத் தெரியாதா என பதில் கொடுத்துள்ளார். இந்த ப்ரோமோவைப் பார்த்த இணையவாசிகள், ஏன்டா செல்லத்தை டென்ஷன் பண்றீங்க என்றும், உன் வாய வெச்சிக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டீயா என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X