அழுகுணி ஆட்டம் ஆடிய பவித்ரா… வச்சு செய்த விஜய் சேதுபதி!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8ன் முதல் வாரத்தின் இறுதிநாளான நேற்று விஜய் சேதுபதி மாஸ் என்ட்ரி கொடுத்து அனைத்து போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சி சுவாரசியமாக நடந்து முடிந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கிய நிலையில், நேற்று சனிக்கிழமை என்பதால், விஜய் சேதுபதி வீட்டிற்குள் நடந்த அனைத்து பிரச்சனைகள் குறித்தும் போட்டியாளர்களிடம் பேசினார். நிகழ்ச்சி தொடங்கியதுமே ரத்தன் டாடாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நிகழ்ச்சியை தொடங்கினார். அப்போது, யார் கிட்ட முதலில் பேசலாம் என்று விஜய் சேதுபதி கேட்க, சுனிதா, சார் அங்கே இருந்து ஆரம்பிங்க சார் என்று ஃபேட் மேனை கை காட்ட, அத நீ என்ன சொல்வது என்பது போல, சுனிதா முதலில் நீங்க சொல்லுங்க என்று ஆரம்பிக்கும் போதே சும்மா ரணகளப்படுத்திவிட்டார்.

விளாசிய விஜய் சேதுபதி: தொடர்ந்து பேசிய அவர், Prank செய்த ரவீந்தர் மற்றும் ரஞ்சித்தை மடக்கி மடக்கி கேள்வி கேட்டார். அது மட்டுமில்லாமல், தர்ஷா குப்தா மற்றும் ஜாக்குலினிடம் முதலில் அடுத்தவர்கள் பேசுவதை கேளுங்க, அடுத்தவர்களை கிண்டல் அடிப்பது வெறுப்பேத்துவது எல்லாம் வேண்டாம் என்று முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டார்.
முதல் ப்ரோமோ: நேற்றைய எபிசோடு சுவாரசியமாக முடிந்த நிலையில், இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ காலையில் வெளியானது. இதில், விஜய் சேதுபதி சாச்சித்தாவிடம் பெண்கள் அணியில் உள்ள மூன்று போட்டியாளர்கள் வீக் போட்டியாளர்கள் என்றீர்கள். ஆனால், அதனை ஏன் பெண்கள் அணியில் கூறவில்லை. ஆனால், ரவிந்தர் இடம் மட்டும் கூறியது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து கடுப்பான சுனிதா, யூனிட்டி மண்ணாங்கட்டி சென்று சொல்லிவிட்டு, ஆண்கள் அணியிடம் இதை சொல்லி இருக்கிறார் என்று ஆதங்கப்பட்டார்.
அழுகுணி ஆட்டம்: தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது, இதில், பவித்ராவை ஆண்கள் டீமுக்கு அனுப்ப காரணம் என்ன என்று தர்ஷிகாவிடம் கேட்டார். அதற்கு அவர், என் தோழி என்பதால் அப்படி செய்யவில்லை, அனைவரும் அவர் செல்லவேண்டும் என்ற நினைத்தனர் என்றார். தொடர்ந்து வீட்டிற்குள் நடந்த பிராங்க் குறித்து பவித்ராவை நிற்க வைத்து கேள்வி கேட்டுள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த இணையவாசிகள் அழுகுணி ஆட்டம் ஆடிய பவித்ரா என்றும், வீக் எண்ட் வந்தாலே இனி ஃபயர் தான் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











