பெரிய இவனு நெனப்பா.. ஊமைக்குத்து குத்திய அன்ஷிதா.. செம்ம தெளிவுப்பா முத்து!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. ஆட்டமும் புதுசு ஆளும் புதுசுனு இந்த சீசனில் களமிறங்கிய விஜய் சேதுபதி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமை என இரண்டு நாளும் சும்மா போட்டியாளர்களை பொளந்துவிட்டார். இணையத்தில் விஜய் சேதுபதி பேசியது தான் தற்போது டிரெண்டாகி இருக்கிறது.

சுனிதா, ரவீந்தர், சத்யா, ரஞ்சித், ஜாக்குலின், தீபக், ஆனந்தி, முத்துக்குமரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷா குப்தா, விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, சாச்சனா, அர்னவ், அக்ஷிதா, தன்ஷிகா, பவித்ரா ஜனனி என 18 போட்டியாளர் இருந்த நிலையில், நேற்று ரவீந்தர் வெளியேறியதைத் தொடர்ந்து போட்டியாளர்களின் எண்ணிக்கை 17ஆக குறைந்துள்ளது.

bigg boss tamil bb8 promo 8

பிக் பாஸ் சீசன் 8: கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் ரவீந்தர், ஜாக்குலின், முத்துக்குமார், சௌந்தர்யா, அருண் ஆகியோர் இருந்த நிலையில், இதில் குறைந்த வாக்குகளை பெற்று அவர் வீட்டில் இருந்து வெளியேறினார். வெளியே வந்ததுமே, பாருடா என் ஆட்டத்தை என்று சொல்லுவது போல, உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தனித்தனியாக விமர்சனம் செய்து அனைவரையும் ஒரு நிமிஷம் அலறவிட்டார்.

இந்த வார நாமினேஷன்: இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியானது. அதில், சீசன் 8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றுள்ளது. இதில் ஆண்கள் பெண்களையும் , பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்ய வேண்டும் இதில், பெரும்பாலானோர் ரஞ்சித், சௌந்தர்யா, ஜெஃப்ரி, சாச்சனா ஆகியோரின் பெயர்களை நாமினேஷன் செய்து இருக்கின்றனர்.

இரண்டாவது ப்ரோமோ: இதையடுத்து, தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் அன்ஷிதாவிற்கும், ஆண்கள் அணியில் இருந்து சென்று பெண்கள் அணியில் விளையாடி வரும் முத்துக்குமரனுக்கும் இடையே காரசாரமான சண்டை ஏற்பட்டுள்ளது. அதில், அன்ஷிதா, முத்து குமரனின் செயல் தனக்கு பிடிக்கவில்லை, உன் சாயம் வெளுத்துப்போச்சு இனிமேல் வந்த நல்லவன் மாதிரி சீன் போடாதே என்று சொல்கிறாள்.

பெரிய இவனு நெனப்பா: இதற்கு பதில் கொடுத்த முத்து, நான் நல்லவன் தான் உங்களுக்கு எதிராக விளையாடுவதால் உங்களுக்கு அப்படித் தெரிகிறது என்று சொல்ல, மேலும் கடுப்பான அன்ஷிகா, டேய் நடிக்காதடா.. என்று பேசுகிறார். ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த அன்ஷிதா, முத்துக்குமரனை பார்த்து உன்கூட பேச எனக்கு விருப்பம் இல்லை, பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு என கூறுகிறார். தற்போது வெளியாகி இருக்கும் இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ், இது என்ன பெரிய இவனு நெனப்பா... சரியா புரியவில்லை தெளிவா சொல்லுங்க என்றும், அன்ஷிதா நீங்க என்னத்தான் ஊமைக்குத்தா குத்தினாலும், முத்து செம்ம தெளிவாக இருக்காரு என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X