ஆளு புதுசு ஆட்டம் பழசு.. புதுசா ஏதாச்சும் பண்ணுங்க.. பிக் பாஸால் கடுப்பான பேன்ஸ்!
சென்னை: எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில், ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம், பெண்கள் டீமில் இருந்து பவித்ரா ஆண்கள் டீமுக்கு சென்ற நிலையில், இந்த வாரம் அணி மாறும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் ரவீந்தர், ஜாக்குலின், முத்துக்குமார், சௌந்தர்யா, அருண் ஆகியோரின் பெயர் இருந்த நிலையில், அதில் குறைந்த வாக்குகள் பெற்ற ஃபேட் மேன் ரவீந்தரன் வீட்டில் இருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து 18 போட்டியாளர்கள் இருந்த பிக் பாஸ் வீட்டில் தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

வயசுக்கு மீறிய பேச்சு: இதில் காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், சீசன் 8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றுள்ளது. இதில் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்ய வேண்டும் இதில், பெரும்பாலானோர் ரஞ்சித், சௌந்தர்யா, ஜெஃப்ரி, சாச்சனா ஆகியோரின் பெயர்களை நாமினேஷன் செய்து இருக்கின்றனர். இதில் விஜே விஷால், சாச்சனா வயசுக்கு மீறி பேசுவதாக கூறி அவரை நாமினேட் செய்தார்.
இரண்டாவது ப்ரோமோ: இதையடுத்து, பிற்பகலில் இரண்டாவது ப்ரோமோ வெளியானது. இதில் அன்ஷிதாவிற்கும், ஆண்கள் அணியில் இருந்து சென்று பெண்கள் அணியில் விளையாடி வரும் முத்துக்குமரனுக்கும் இடையே காரசாரமான சண்டை நடந்துள்ளது. அதில், அன்ஷிதா, முத்து குமரனின் செயல் தனக்கு பிடிக்கவில்லை, உன் சாயம் வெளுத்துப்போச்சு இனிமேல் வந்த நல்லவன் மாதிரி சீன் போடாதே என்று சொல்கிறாள்.மேலும், உன்கூட பேச என விருப்பம் இல்லை, பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு என பேசி இருந்தது இரண்டாவது ப்ரோமோவில் தெரியவந்தது.
மீண்டும் மீண்டுமா: தற்போது, மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், இந்த வாரமோ ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒருவர் அணி மாற வேண்டும் என்று டாஸ்க் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். இதையடுத்து ஆண்கள் எல்லாம் கூடிப் பேசி தீபக்கை பெண்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். அதேபோல, பெண்கள் அனைவரும் சேர்ந்து பேசி தர்ஷா குப்தாவை ஆண்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, பவித்ரா, கடந்த வாரம் ஆண்கள் வீட்டில் இருந்த அனுபவத்தை தர்ஷாவுடன் ஷேர் செய்துள்ளார். அதில், உன்னை மென்டலி டவுன் பண்ணுவாங்க. உன்னை ஹர்ட் பண்ண வேண்டும் என முயற்சிப்பாங்க என்று தர்ஷாவிடம் கூறினார் பவித்ரா.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அய்யோ மீண்டும் மீண்டுமா என்றும், ஆளு புதுசு ஆட்டம் பழசு.. புதுசா ஏதாச்சும் பண்ணுங்க பிக் பாஸ் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











