Bigg Boss season 8: பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சிவகார்த்திகேயன்.. வந்ததும் என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: அக்டோபர் 6ந் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி 18 நாட்களை எட்டி இருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் சிவகார்த்திகேயன் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இதனால், போட்டியாளர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சரியாக தொகுத்து வழங்குவாரா? கமலுக்கு ஈடுகொடுத்து பேசுவாரா என்கிற தயக்கம் இருந்தது. ஆனால், அவை அனைத்தையும் முதல் எபிசோடிலேயே தவிடு பொடியாக்கிவிட்டார். இவரின் பேச்சை கேட்பதற்கு என்றே தனிக்கூட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருக்கின்றனர்.

bigg boss season 8 sivakarthikeyan amaran 8

வெளியேறிய போட்டியாளர்: இரண்டு வாரங்களை பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், முதல் வாரத்திலேயே தயாரிப்பாளர் ரவீந்திரன் வெளியேறினார். இதையடுத்து இரண்டாவது வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்று அர்னவ் வெளியேறினார். தற்போது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில், இரண்டாவது வார நாமினேஷனில், அன்ஷிதா,அருண் பிரசாத், ஜாக்குலின், முத்து, சத்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோர் நாமினேஷன் ஆகினர். இதில் தர்ஷா குப்தா, அன்ஷிதா ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளனர். இதில் யார் வெளியேறப்போகிறார் என்று தெரியவில்லை.

சிவகார்த்திகேயன் என்ட்ரி: இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியானது. அந்த ப்ரோமோவில் அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். மேலும், அமரன் திரைப்படம் பல எமோஷன்களை பதிவு செய்கிற திரைப்படம் என்றார். அமரன் திரைப்படத்திற்கும் பிக் பாஸுக்கும் பல தொடர்புகள் இருக்கிறது. ஒற்றுமை மிகவும் முக்கியம் என போட்டியாளர்களிடம் சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார். மேலும், பிக் பாஸ் போட்டியாளர்களுடன் அமரன் என எழுதப்பட்ட கேக்கை வெட்டினார். இதைத்தொடர்ந்து போட்டியாளர்கள் சிவாவிற்கு பூங்கொத்து கொடுத்து அமரன் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

அமரன் திரைப்படம்: சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X