பிக்பாஸில் களமிறங்கும் சர்ச்சை நாயகன்? முதல் நாளில் இருந்தே சர்ச்சைக்கு ப்ளான் போடும் விஜய் டிவி!
சென்னை: தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பெரும்பான்மையான ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது எட்டாவது சீசனுக்கான பேச்சுவார்த்தை மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற காரணத்திற்காகவே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். நாள் நாளடைவில் போட்டியாளர்கள் தங்களைப் போன்ற குணாதிசயம் கொண்டவர்களாக உள்ளனர் என போட்டியாளர்களுக்காக சமூக வலைதளங்களில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துவிட்டனர். இது பிக்பாஸ் குழுவே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது.

சினிமாவில் கலக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்: மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பல போட்டியாளர்கள் இன்றைக்கு சினிமா உலகில் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். உதாரணத்திற்கு, ஹரிஷ் கல்யாண், கவின், ஆரோவ், தர்ஷன், ஆரி, பாலா உள்ளிட்ட பலர் பிக்பாஸ் மூலம் தங்களுக்கான இடத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர்.

லவ் ட்ராக்: வழக்கமாக ஒரு சீசன் என்றால் அந்த சீசனில் இளம் வயதில் இருந்து மூத்த வயதினர் வரையிலான போட்டியாளர்கள் இருப்பார்கள். இதில் இளம் வயதில் இருப்பவர்கள் நெருங்கி பேசுவதையும் அல்லது அதிகமாக ஒன்று கூடி பேசுவதையும் ரசிகர்கள் காதல் என்று சமூக வலைதளங்களிலும் பொதுவெளிகளிலும் பேசுவார்கள். இது மட்டும் இல்லாமல் வீட்டுக்குள் யாராவது சர்ச்சைக்குரிய நபர்களாக இருந்தால் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும் என பிக் பாஸ் குழு ஒரு யுக்தியை பயன்படுத்தி வருகிறார்கள் என்று கூறலாம். இப்படியான நிலையில் இம்முறை பிக் பாஸ் குழுவே வீட்டிற்குள் ஒரு காதல் ஜோடியை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த காதல் ஜோடி சர்ச்சைக்குரிய கண்டன்டுகளையும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பிக் பாஸ் குழு அவர்களை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிடிஎஃப் வாசன்: அதன் அடிப்படையில் இம்முறை பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரபலங்களில் இருவர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதாவது தமிழ்நாடு முழுவதும் அறிந்த சர்ச்சை நாயகனாகவே வலம் வந்து கொண்டிருக்க கூடிய டிடிஎஃப் வாசன் பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக களமிறங்க உள்ளார் எனவும் அவரோடு அவரது காதலியும் பிக் பாஸ் சீசன் எட்டின் போட்டியாளராக வீட்டுக்குள் செல்ல உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவர்த்தைகளை பிக் பாஸ் குழு இருவரிடமும் நடத்தி வருகின்றது என்ற தகவல்கள் உலா வருகின்றது. டிடிஎஃப் வாசனின் காதலியான ஷாலின் ஷோயா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











