Bigg Boss 8: ஜாக்குலின் எவிக்ட்.. மன உளைச்சலால் மருத்துவமனையில் அனுமதியான ரசிகை.. இணையத்தில் குமுறல்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்னும், இரண்டு நாட்களில் நிறைவடையவுள்ளது. கடந்த வாரத்தில் வீக் எண்ட் முடியும்போது, டாப் 6 போட்டியாளர்கள் வீட்டில் இருந்தார்கள். முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், விஷால், ரயான் மற்றும் பவித்ரா என ஆறு போட்டியாளர்கள் வீட்டில் இருந்தார்கள். இந்த வாரத்தில் வைக்கப்பட்ட கேஷ் பாக்ஸ் டாஸ்க்கில் ஜாக்குலின் தோல்வியைத் தழுவினார். இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். மக்களால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அவர்களுக்கு கொடுப்பட்ட டம்மி டிராபிகளை உடைத்து விட்டுத்தான் வெளியே வருவார்கள். ஆனால் ஜாக்குலினை டிராபியுடன் வழி அனுப்பினார் பிக் பாஸ்.

இப்படியான நிலையில் ஜாக்குலின் எவிக்ட் ஆனதைப் பார்த்த ரசிகை ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாகி, மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். இது தொடர்பாக அவரது, எக்ஸ் பக்கத்திலும் அந்த ரசிகை புலம்பியும் தள்ளியுள்ளார். அவரது பதிவு, பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியிலும், இணையவாசிகள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.

bigg boss jacquline evicted bigg boss tamil season8

பிக் பாஸ் வரலாற்றிலேயே, அதிக முறை அதாவது 15 வாரங்களுக்கு நாமினேட் செய்யப்பட்டு கடைசி வரை மக்களால் எவிக்ட் செய்யப்படாத போட்டியாளர் என்றால் அது, ஜாக்குலின் தான். இந்த சீசனின் முதல் வாரம் தொடங்கி, போட்டி முடியவுள்ள கடைசி வாரம் வரை, ஜாக்குலின் மக்களின் வாக்குகளைப் பெற்று வீட்டிற்குள் இருந்துள்ளார். இப்படியான நிலையில் ஜாக்குலின் பணப்பெட்டியை எடுக்கும் முயற்சியில், 2 விநாடிகள் தாமதமாக போட்டியை முடித்ததால், போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். சக போட்டியாளர்களும் ஏற்கனவே வெளியேறிய ஹவுஸ் மேட்ஸ் ஜாக்குலினை கண்ணீரோடு வழி அனுப்பினார்கள்.

ரசிகை மன உளைச்சல்: ஜாக்குலின் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது, ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார்கள். இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகை ஒருவர், ஜாக்குலின் எவிக்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும், இதனால் அவருக்கு உடல்நலக் கோளாறும் ஏற்பட்டு, மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சையில் உள்ள, அந்த ரசிகை விஜய் டீவியைச் சாடியும், ஜாக்குலின்க்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனையில்: அதாவது, ” டேய்! விஜய் டீவி, உங்கள நம்பி ஷோ பாத்ததுக்கு எங்க கொண்டு வந்து விட்டுருக்கீங்கனு பாத்தீங்களா? ரீசைலண்ட் குயின் ஜாக்குலின் நீங்கள் நிஜமாகவே போர்க்குணம் கொண்டவர்தான். தீபக், மஞ்சரி, அருண் நீங்களுமே இறுதி மேடைக்கு தகுதியான போட்டியாளர்கள்தான். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நான் இப்போது நலமாகத்தான் உள்ளேன்” என பதிவிட்டுள்ளார், மேலும் இவரது இந்த பதிவோடு கையில் டிரிப்ஸ் இறங்கக்கூடிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

bigg boss jacquline evicted bigg boss tamil season8

கமெண்ட்: இவரது இந்தப் பதிவினைப் பார்த்த இணையவாசிகளும், பிக் பாஸ் ரசிகர்களும், என்ன ஆனது எனக் கேள்வி, எழுப்ப, பிபி குறைந்து சுயநினைவை இழந்துவிட்டேன் என பதில் அளித்துள்ளார் அந்த ரசிகை. இதில் ஒரு இணையவாசி, என்னங்க படுச்சவங்களும் இப்படி இருக்கீங்க? எதையும் ரொம்ப எமோஷ்னலா கனைக்ட் செய்து கொள்ள் வேண்டாம் என கமெண்ட் போட்டிருந்தார். அதற்கு, அந்த ரசிகை லோ பிபி படிக்கலனாலும் வரும்ங்க என பதில் அளித்துள்ளார் ரோஷினி ரவிஷங்கர் என்ற அந்த ரசிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X