BB8: இந்த வார நாமினேஷன்..அந்த சூனியக்காரியை வெளியே அனுப்புங்க.. கடுப்பான நெட்டிசன்ஸ்!

சென்னை: 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஆளாக ரவீந்தர் வெளியேறினார். அதன் பின் அர்னவ் வெளியேறினார்.மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா வெளியேறி உள்ள நிலையில், நான்காம் வாரத்திற்கான நாமினேஷனில் ஒன்பது போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர். இதில் யார் வெளியேறப்போகிறார் என்பது இந்த வாரம் தெரிந்துவிடும்.

அக்டோபர் 6ந் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று வாரங்கள் முடிந்து நான்காம் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. பிக் பாஸ் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷனில் சிக்கிய தர்ஷா குப்தா குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விஜய் சேதுபதியிடம் பேசினார். நான் வீட்டுக்கு வந்து சரியாக விளையாடவில்லை. எல்லாத்துக்கும் அழுதுக்கிட்டே இருந்தேன். இனிமேல் அழவேக்கூடாது, மற்றவர்களைத்தான் அழவைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் அதற்குள் இப்படி ஆகிவிட்டது என்றார்.

bigg boss season 8 nomination 8

பிக் பாஸ் சீசன் 8: இதையடுத்து வீட்டில் உள்ள சக போட்டியாளர்களிடம் பேசிய தர்ஷா, தீபக் அண்ணா நீங்க நினைச்சபடியே நான் வெளியே வந்துவிட்டேன் இப்போது சந்தோஷமா, இன்னைக்கு நான், அடுத்த வாரம் நீங்க வெளியே வருவீங்க என்றார். இதைத்தொடர்ந்து, சுனிதாவிடம் பேசிய தர்ஷா, சுனிதா, மேனேஜரும் நீங்க தான், கஸ்டமரும் நீங்க தான் என சொல்லும்போது, சுனிதா குறுக்கிட்டுக் கொண்டு, ரொம்ப அழகாக இருக்கேன்னு சொல்ல போறியா; அதுதானே உன் கவலை? என்று கேட்க, அதற்கு தர்ஷா அது என் கவலை இல்லையே, நீங்களே ஒன்று நினைச்சிக்கிட்டு, நான் சொல்ல வருவதற்கு முன்னாடியே, உன் கவலை இதுதானா என்று சொல்லியே என்னை வெளியில் அனுப்பிட்டீங்க என்று சுனிதாவிற்கு சரியான நோஸ் கட் கொடுத்தார்.

வன்மத்தை கக்கிய தர்ஷா: இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் ஒரு ஆறு பேர் கொண்ட குழு இருக்கு அவங்க தான் வீட்டில் எல்லா முடிவும் எடுப்பாங்க என்று சொல்லிவிட்டு, இனி ஒவ்வொருத்தரா வெளியே வாங்க, நான் வெளியில் இருந்து பார்க்கிறேன் என்று கோபத்துடன் சொன்னார். அப்போது குறுக்கிட்ட விஜய் சேதுபதி, அந்த வீட்டில் மூன்று வாரம் இருந்து இருக்கிறீர்கள்,வெளியில் வந்ததும் எதாவது நல்லதா சொல்லலாமே, இப்படி பேசுவது சரியில்லை என்று கண்டித்திருந்தார்.பிக் பாஸ் வீட்டில் 20 நாள் இருந்ததற்காக தர்ஷாவிற்கு 5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூனியக்காரி: இதையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினேஷனில், ஜாக்லின், அருண், ரஞ்சித், சத்யா, பவித்ரா, சுனிதா, ஜெஃப்ரி, அன்ஷிதா, தீபக் என 9 போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர். இதில், அன்ஷிதா மற்றும் தீபக் நேரடியாக நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இதில் தான் செய்றது மட்டும் தான் சரின்னு நினைக்கிறாங்க. ஒரு குரூப்பா இருக்காங்க. இன்னும் விளையாட்ட விளையாட ஆரம்பிக்கல போன்ற காரணங்கள் சொல்லப்பட்டது. இதுகுறித்து வெளியான ப்ரோமோவைப் பார்த்த இணையவாசிகள், அந்த சூனியக்காரி சுனிதாவை வெளியில் அனுப்புங்க என்றும், குக் வித் கோமாளியில் பார்த்த சுனிதா இது இல்லை என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதே போல ஆனந்தி மற்றும் பவித்ராவிற்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X