பிக் பாஸ் வீட்டில் 21 நாட்கள் இருந்த வர்ஷினி.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த வர்ஷினி வெங்கட் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். பிக் பாஸ் வீட்டில் அவர் மூன்று வாரங்கள் இருந்துள்ளார். அதாவது 21 நாட்கள் அந்த வீட்டில் இருந்ததற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்த போதும், சுவாரசியமே இல்லாமல் செல்கிறது. கடந்த வாரம் ராஜா, ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த எபிசோடுகளை பார்க்கவே என்னடா இது என்று வெறுப்பாகவே இருந்தது. இதில், கடந்த வாரம் முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால், ராணவ், ஜாக்லின், அருண், பவித்ரா, ரயான், சாச்சனா, தர்ஷிகா. வர்ஷினி, சிவகுமார், ஆனந்தி, சிவக்குமார் என 13 போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கினார்கள். இதில், சிவக்குமார் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெற்று எஸ்கேப் ஆனதால் எஞ்சியுள்ள 12 பேரில் யார் வெளியேறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

bigg boss tamil varshini salary

இதில் சௌந்தர்யாவின் ரசிகர்கள் வாக்களித்து அவரை காப்பாற்றி வருகின்றனர். அதே போல முத்துக்குமரனின் ரசிகர்களும் அவரை பாதுகாத்து வருகின்றனர். இதில் சௌந்தர்யா அதிக வாக்குகளை பெற்று முதல் இடத்திலும், முத்துக்குமரன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதில் குறைந்த வாக்குகளை பெற்ற வர்ஷினி வெங்கட் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் கொடுத்த டிராபியை உடைத்துவிட்டு வெளியே வந்து விஜய் சேதுபதியிடம் பேசிய அவர், யாரையும் குறை சொல்லாமல், பிக் பாஸ் வீட்டில் மூன்று வாரம் இருந்ததே பெரிய விஷயமாக பார்க்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த மக்களுக்கு நன்றி என்றார். வழக்கமாக எலிமினேட்ஆகி வெளியேறினால், கண்ணீர் விட்டு அழுது உள்ளே இருப்பவர்கள் சரியில்லை என்று குறை சொல்வது தான் வழக்கம். ஆனால், வர்ஷினி சிரித்த முகத்தோடு வெளியேறியதால், அவரை விஜய் சேதுபதி பாராட்டினார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக வர்ஷினி வெங்கட் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாகவும், அதன்படி வர்ஷினி பிக் பாஸ் வீட்டில் 21 நாட்கள் இருந்து இருப்பதால், அவருக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X