வாண்டடாக வந்து மாட்டிய அர்னவ்.. அது என்ன பெண்ணா? மனுஷன் ஒரு முடிவோடுத்தான் இருக்காரு போல!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் நேற்றை எபிசோடில் எதையும் மறைத்து பேசாமல் முகத்திற்கு நேராக பேசி முதல் எபிசோடிலே கலக்கி விட்டார் விஜய் சேதுபதி. இதையடுத்து இன்று கலக்கலாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
நிகழ்ச்சி தொடங்கியது மேல அழகாக என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, பார்வையாளர்களிடம் நேற்று நான் கடுமையாக கொண்டேனா என்று கேட்டார். நான் ஜாலியாக நடந்து கொண்டால் யாரும் விளையாட்டை சீரியசாக விளையாட மாட்டார்கள் அதற்காகத்தான் என்று நிகழ்ச்சியை தொடங்கினார்.

மன்னிப்பு கேட்ட ரஞ்சித்: அப்போது, ரஞ்சித், நேற்று விவாதத்தில் அந்த பிராங்க் தொடர்பாக நடந்த விவாதத்தை நினைத்து கவலையாக இருக்கு, நான் ஃபேட் மேனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். தெடர்ந்து, ரஞ்சித், ஃபேட்மேனை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டார். அப்போது விஜய்சேதுபதி, மன்னிப்பு கேட்பவன் மனிதன்.. மன்னிப்பவன் பெரிய மனுஷன் என்று பேசி கமல் ஹாசனை நினைவு படுத்தினார்.
வாண்டடாக வந்து மாட்டிய அர்னவ்: இதைத்தொடர்ந்து, தர்ஷிகா கேப்டன்ஷிப் எப்படி இரு என் கேட்க, வாண்டடாக வந்து மாட்டிய அர்னவ், அவங்க கேப்டன்ஷிப் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், சண்டை நடக்கும் இடத்தில், அவுட்ஆப் கட்ரோல் ஆகிவிட்டார் என்றார். உடனே குறுக்கிட்ட விஜய்சேதுபதி, அனைவரும் சத்தம் போட்டு கத்திக்கொண்டு இருக்கும் போது, நாம அமைதியாக சத்தம் போடாதீங்க என்று சொல்ல முடியாது, அந்த நேரத்தில் நீங்க எப்படி சொல்லுவீங்க என்று கேட்டு அர்னவை திக்குமுக்காட வைத்துவிட்டது.
விஜய்சேதுபதி விளாசல்: அதைத்தொடர்ந்து, தர்ஷிதா கேப்டன்ஷிப் பற்றி பேசி விஜே விஷால், நல்ல கேப்டனாக இருந்தார்கள். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அடியெல்லாம் வாங்கினது பெரிய விஷயம் என்று விஷால் சொல்ல, உடனே என்ட்ரியான விஜய் சேதுபதி, அது என்ன பெண்ணா.. தயவு செய்து இனிமே ஒரு பெண்ணா என்று பெண்களை சிறுமைப்படுத்தும் வகையில் பேச வேண்டாம் என்று கண்டிப்பாக சொன்னார். இந்த வீடியோவை பார்க்கும் போது, மனுஷன் ஒரு முடிவோடுதான் வந்து இருக்கிறார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











