அடுத்த பிரியங்காவாக ஆசைப்பட்டாரு.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர் தானா?
சென்னை: கடந்த வாரம் பிரம்மாண்டமான ஓபனிங்குடன் தொடங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த சீசனை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கப்போகிறார் என்றதும் இந்த நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு போட்டியாளரையும் முத்தம் கொடுத்து,கட்டிப்பிடித்து வரவேற்றார்.
இதில், சுனிதா, ரவீந்தர், சத்யா, ரஞ்சித், ஜாக்குலின், தீபக், ஆனந்தி, முத்துக்குமரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷா குப்தா, விஜே விஷால், அருண் பிரசாந்த், ஜெஃப்ரி, சாச்சனா, அர்னவ், அக்ஷிதா, தன்ஷிகா, பவித்ரா ஜனனி என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். இதில், 24 மணி நேரத்தில் சாச்சனா வெளியேறி மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ள நிலையில் இன்று யார் வெளியேறப்போகிறார் என்று பார்க்கலாம்.

பிக்பாஸ் 8 போட்டியாளர்கள்: பிக் பாஸ் சீசன் 8ல் இந்த முறை Boys Vs Girls என்ற பெயரில் 9 பெண்களும், 9 ஆண்களும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். இதில், பெண்கள் டீமில் இருந்த பவித்ரா ஜனனி ஆண்கள் டீமுக்கு சென்றுள்ளார். அதே போல ஆண்கள் டீமில் இருந்த முத்துக்குமரன் பெண்கள் டீமில் இருக்கிறார். இந்த வார கொஞ்சம் சுவாரசியமாக சென்றது என்று சொல்லலாம்.
போடி..வாடி சண்டை: விஷால் பவித்ராவை போடி... வாடி என்று கூப்பிட கடுப்பான பவித்ரா, இதோ பாரு விஷால், இந்த மாதிரி போடி... வாடின்னு கூப்பிடாத எனக்கு பிடிக்காது என்று வார்னிங் கொடுக்க கடுப்பான விஷால். ஏய் ... அது பழக்கம்பா, நான் சும்மா தான் கூப்பிட்டேன் என்று சொல்ல, அது எப்படி, அப்படி கூப்பிடாதேனு சொல்லியும் நீ கூப்பிடுவியா என்று இருவரும் சண்டை போட்டுக்கொள்ள. இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரவீந்தர் மற்றும் ரஞ்சித் சண்டை போட்டுக்கொண்டது போல நாடகமாடி பெண்களை பிராங்க் செய்தனர்.
இந்த வார நாமினேஷன்: அதையடுத்து நடந்த இந்த வார பிக் பாஸ் நாமினேஷனில் ரவீந்தர், ஜாக்குலின், ரஞ்சித், செளந்தர்யா, முத்துக்குமரன், அருண் பிரசாத் என 6 போட்டியாளர்களின் பெயர்கள் நாமினேஷனில் உள்ளது. ஜாக்குலின் பிக் பாஸ் வீட்டுக்கு வந்ததில் இருந்து தனியாக செயல்பட்டுக்கொண்டு இருப்பதாக கூறி பலர் அவரை நாமினேஷன் செய்தனர். அதே போல, ஃபேட்மேன் மற்றும் ரஞ்சித் பிராங்க் செய்ததால் கடுப்பான பெண்கள் இருவரையும் நாமினேட் செய்தனர். இதில் சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் டேன்ஜர் ஜோனில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாரம் குறைந்த வாங்குகளை பெற்றுள்ள சௌந்தர்யா வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி ரிவ்யூ: நிகழ்ச்சியில் இவர் அடுத்தடுத்து கறார் காட்டிய நிலையில் இவர் வெளியேற உள்ளதாக கூறப்படுவது ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. இன்றும் நாளையும் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் பங்கேற்கவுள்ளார். இதன் பிரமோ முன்னதாக வெளியாகியுள்ள நிலையில், இவர் தன்னுடைய ரிவ்5யூவில் முதலில் யாரை வெளியேற்றப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில்தான் தற்போது சௌந்தர்யாவின் பெயர் அதிகமாக அடிபடுகிறது


Click it and Unblock the Notifications











