“பேப்பர் ரவுடியும், பேனிக் அட்டாக் லேடியும்“.. பிரஜன், சாண்ட்ராவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பிரஜன் மற்றும் சாண்ட்ரா இருவரும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தனர். பிக் பாஸ் வரலாற்றிலேயே கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டது இந்த சீசனில் தான். வீட்டிற்குள் வந்ததும் சாண்ட்ரா தனது சீக்ரெட் டாஸ்கை சிறப்பாக செய்து முடித்து விஜய் சேதுபதியிடம் பாராட்டை பெற்றார். ஆனால், பிரஜன் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் முறைத்துக் கொண்டார். குறிப்பாக திவாகரிடம் நேருக்கு நேர் சண்டை போட்டார். அதேபோல, FJ பற்றியும் சில வார்த்தைகளை விட்டு விஜய் சேதுபதியிடம் கடுமையாக திட்டு வாங்கினார். பின் அந்த வாரத்திலேயே பிரஜன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிரஜன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது சாண்ட்ரா கத்தி, அழுது ஆர்ப்பாட்டமே செய்துவிட்டார். அதோடு மட்டுமில்லாமல் அசோகவனத்தில் இருக்கும் சீதை போல, எப்போதும் பிக் பாஸ் வாசலில் பிரஜனின் சட்டையுடன் அழுது கொண்டே இருந்தார். இதனால், அழுமூச்சு சாண்ட்ரா, நடிப்பு அரக்கி சாண்ட்ரா என கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த சாண்ட்ரா, தனது குழந்தைகளை பார்த்த பிறகு, மீண்டும் விளையாட்டில் கவனத்தை செலுத்தி விளையாடினார். அப்போது, நடந்த டிக்கெட் டூ பினாலே கார் டாஸ்கில் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் சாண்ட்ராவை எட்டி உதைத்தனர். இதனால், அவருக்கு பேனிக் அட்டாக் வந்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பார்வதி மற்றும் கமருதீன் இருவருக்குமே விஜய் சேதுபதி ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பினார்கள்.

bigg boss tamil 9 prajin sandra 9
Photo Credit:

நடிப்பு அரக்கி: முதலில் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்குமே ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது சரி தான் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதன் பிறகு, கம்ருதீன் சாண்ட்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபோது சாண்ட்ரா பயந்து அழுததும். பார்வதி சாண்ட்ராவிடம் பேசிய போது சாண்ட்ரா நடந்து கொண்ட விதம் நடிப்பின் உச்சம் என இணையத்தில் பலர் சாண்ட்ராவை திட்டினார்கள். மேலும், சாண்ட்ராவிற்கு பேனிக் அட்டாக் வரவில்லை எல்லாம் நடிப்பு என பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த போட்டியாளர்களே மீண்டும் உள்ளே சென்ற போது சாண்ட்ராவின் முகத்திற்கு முன்பாகவே கேட்டனர். அதற்கு, ஏதே ஒரு சப்பையான காரணத்தை சொல்லி சாண்ட்ரா சமாளித்தார்.

வசமாக சிக்கிய ஜோடி: இந்நிலையில், இன்று கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பிரஜன் மற்றும் சாண்ட்ரா இருவரும் சேர்ந்து, 'உன்னை தேடி காதல் என்ற வார்த்தையை நம்பு"என்கிற பாடலுக்கு நடனமாடி உள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில் அதைப்பார்த்த இணையவாசிகள் "பேப்பர் ரவுடியும், பேனிக் அட்டாக் லேடியும்" இருவரையும் வச்சு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X