Bigg Boss Winner: 50 லட்சம் பரிசு.. சொகுசு கார்.. 70 நாள் சம்பளம்.. பல லட்சத்தை அள்ளிய திவ்யா!

சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே வந்த திவ்யா கணேஷ், சிறப்பாக விளையாடி சீசன் 9 டைட்டிலை வென்று 50 லட்சம் ரூபாய் பரிசை தட்டி தூக்கி உள்ளார். அவருக்கு இணையத்தில் பலர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததில் இருந்து ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். வைல்டு கார்டு போட்டியாளராக பிரஜன் அவரது மனைவி சாண்ட்ரா, திவ்யா கணேஷ் மற்றும் அமித் ராகவ் என நான்கு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததுமே நீங்கள் என்ன விளையாட்டு விளையாடுறீங்க, உங்கள் விளையாட்டை பார்ப்பதற்கே முடியவில்லை என பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக திவ்ய கணேஷ் பார்வதியிடம் நீங்கள் ஒரு பிரபலம் அப்படி இருக்கும்போது வெளியில் எப்படி உங்களை காட்டுவார்கள் என்பது உங்களுக்கு தெரிய வேணாமா என கம்ருதீன் பார்வதி இடையேயிலான நட்பு குறித்து பேசினார். இதனால், திவ்யா வீட்டிற்குள் வந்ததுமே இருவருக்கும் இடையே முட்டிக்கொண்டது.

Bigg Boss tamil 9 Divya Ganesh winner 9
Photo Credit:

பிக் பாஸ் சீசன் 9: எது எப்படியாக இருந்தாலும் திவ்யா, தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வீட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தார்.குறிப்பாக, கார் டாஸ்கில் பார்வதி மற்றும் கம்ருதீன் சாண்ட்ராவிடம் மோசமாக நடந்து கொண்ட போது, கோவத்தின் உச்சத்திற்கு சென்ற திவ்யா, பார்வதி உண்டு இல்லை என ஆக்கினார். அதோடு மட்டுமில்லாமல் கம்ருதீன் வெளியில் செல்லும் போது, இதை நான் சொல்லமா என்று தெரிவில்லை, வெளியில் போனாலும் பார்வதியுடன் மட்டும் நட்பு வேண்டாம் என்று அறிவுரை கூறினார். இதனால், பார்வதியின் இமேஜ் அதிகரித்தது. அதே நேரம் கானா வினோத்திற்கும் மக்களிடம் ஆதரவு இருந்ததால் அவர் டைட்டிலை வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

திவ்யா கணேஷ்: இதையடுத்து, இறுதி போட்டியாளர்களாக விக்ரம், சபரி, திவ்யா, அரோரா இருந்தனர். இதில், அரோரா மற்றும் விக்ரம் வெளியேறிய நிலையில் திவ்யா வெற்றி கோப்பையை பெற்றார். சபரி இரண்டாவது இடத்தை பிடித்தார். வெற்றி பெற்ற திவ்யாவிற்கு 50 லட்சம் ரூபாயும், சுமார் 19 லட்ச ரூபாய் மதிப்புள்ள Maruti suzuki victoris சொகுசு கார் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த வீட்டில், திவ்யா 77 நாட்கள் இருந்துள்ளார். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ 30 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆக மொத்தம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் திவ்யா வெற்றி பெற்றதன் மூலம் கிட்டத்தட்ட ரூ 70 லட்சத்திற்கு மேல் சம்பாதித்துள்ளார். டைட்டிலை வென்ற திவ்யா, பலவிதமான கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கிறேன். ஆனால், ஒரு விருதையும் நான் வாங்கியது இல்லை. மற்றவர்கள் வாங்கியதை பார்க்கும் போது மனதிற்குள் ஆசையாக இருக்கும். அந்த ஆசை இந்த வீட்டில் நான், நானாக இருந்ததற்காக கிடைத்து இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். இணையத்தில் பலர் திவ்யா கணேஷிற்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X