இழு இழு இழுன்னு இழுக்குறாங்களாம் அர்ச்சனா.. அருண் செஞ்ச வேலைய பாருங்க!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து டைட்டிலை தட்டி தூக்கியவர் அர்ச்சனா. முன்னதாக சீரியல்களில் வில்லியாக நடித்து வந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சிறப்பான அறிமுகத்தை ரசிகர்களிடையே கொடுத்தது.
இவரது காதலர் அருண் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக நுழைந்து இடையிலேயே வெளியேறினார். தன்னுடைய காதலர் வெற்றி பெறுவதற்காக அர்ச்சனா வெளியில் இருந்தபடி சப்போர்ட் செய்தார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் சென்றும் அவரை பார்த்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 8 சீசன்களை நிறைவு செய்துள்ளது- முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் ஹோஸ்ட் செய்த நிலையில், கடந்த 8வது சீசனை விஜய் சேதுபதி ஹோஸ்ட் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் பல மாற்றங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருந்த நிலையில், நிகழ்ச்சி துவக்கத்தில் சரியாக ரசிகர்களை கவராத நிலையில் அடுத்தடுத்த தினங்களில் வெற்றிகரமாக நடைபோட்டது,
அருண் -அர்ச்சனா ஜோடி: இந்த நிகழ்ச்சியின் 7வது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா, அந்த சீசனின் டைட்டிலை தட்டித்தூக்கினார். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்தவர் அர்ச்சனா. இதன்மூலமே அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இடையில் அவர் நுழைந்தாலும் துவக்கம் முதலே அவர் தன்னுடைய அட்டகாசமான ஆட்டத்தை கொடுத்தார். சில தினங்களிலேயே பிக்கப் செய்துக் கொண்ட அர்ச்சனா சக போட்டியாளர் நிக்சன் உள்ளிட்டவர்களுடன் ஆடிய ஆட்டம் மிகச்சிறப்பான கவனத்தை பெற்றது. இடையிலேயே அர்ச்சனாவின் வெற்றி அப்பட்டமாக தெரிந்தது.
அருணுக்கு சப்போர்ட்: இதையடுத்து அவருக்கு சினிமாவில் நடிக்கவும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியான டிமான்டி காலனி 2 படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் அவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே பிக்பாஸ் 8 சீசனில் பங்கேற்ற அருண் மற்றும் அர்ச்சனா இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். கடந்த சீசனில் அருண் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவரால் நிகழ்ச்சியில் தொடர முடியவில்லை. இதனிடையே, அருணை சப்போர்ட் செய்யும் வகையில் அடுத்தடுத்த செயல்களில் அர்ச்சனா பங்கேற்றார்.
காதலர் தினக் கொண்டாட்டம்: பிக்பாஸ் வீட்டில் சென்று அருணை சந்தித்து அவரை ஊக்குவித்த அர்ச்சனா, வெளியிலிருந்தும் அவரை சப்போர்ட் செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் தங்களது காதலை வெளிப்படுத்திய நிலையில், இந்த ஆண்டிலேயே இவர்களின் திருமணம் நடக்கவுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இன்றைய தினம் காதலர் தினத்தையொட்டி அருண் மற்றும் அர்ச்சனா இருவரும் நெருக்கமான புகைப்படங்கள் மற்றம் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். சூட்டிங்கின் இடைவெளியில் இதை செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உறவுக்கு தான் துவக்கம் முதலே மிகச்சிறப்பான கவனத்தை கொடுத்துள்ளதாக அருண் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











