யார்ரா அந்த பையன்.. நான் தான் அந்த பையன்.. அப்பவே விஜய் டிவியில் கெத்துக்காட்டிய சவுந்தர்யா!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் மாஸ் காட்டி வருகிறார் சவுந்தர்யா. ஓவியாவுக்குப் பிறகு செம சூப்பராக வெளிப்படையாக விளையாடி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார். வீட்டில் படுத்துக் கொண்டு அவர் செய்த புரட்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சவுந்தர்யாவின் குரலை முதல் நாளிலேயே போட்டியாளர்கள் கலாய்த்ததும் அவருக்கு ரசிகர்கள் சப்போர்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்த சீசனில் அதிக பிஆர் டீம் உடன் சவுந்தர்யா களம் இறங்கியிருக்கிறார் என்றும் அதனால் தான் சோலோ கேம் விளையாடி வருகிறார் என பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களே பேச ஆரம்பித்து விட்டனர்.

bigg boss tamil bigg boss tamil 8

சவுந்தர்யாவின் சவுண்டை கேட்டு ரசிகர்கள் அவரை பிடிக்காமல் போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சவுண்ட் என்றே செல்லமாக அழைக்க ஆரம்பித்து விட்டனர். யாருடா இந்த பொண்ணு என தேடிய ரசிகர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டு கலக்கியவர் தான் சவுந்தர்யா என்பது தெரிய வந்துள்ளது.

அடுத்த ஓவியா: இந்த சீசனில் சவுந்தர்யா கேம் விளையாடி வருவதை பார்த்த ரசிகர்கள் ஃபேக்காக இல்லாமல் இயல்பாக விளையாடி வருகிறார் என்றும் தக் லைஃப் தலைவி சவுந்தர்யா என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 1ல் ஓவியாவுக்கு கிடைத்தது போல ரசிகர்கள் கிடைத்து வரும் நிலையில், அடுத்த ஓவியா என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சவுந்தர்யாவின் அழகுக்கும் அவரது குரலுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

ஆண்களை கதறவிட்ட சவுந்தர்யா: பெண் போட்டியாளர்கள் வாரம் வாரம் அனைத்து விளையாட்டுகளில் மாஸ் காட்டி எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸையும் வென்று வருகின்றனர். இந்த வாரம் ரேஷன் டாஸ்க்கிலும் பெண்கள் அணியினர் 7000 பாயிண்ட்டுகளையும், ஆண்கள் அணியினர் வெறும் 3000 பாயிண்ட்டுகளையும் பெற்றனர். பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், லிவிங் ஏரியாவுக்கு ஆண்கள் அணியினர் வரவேண்டும் என்றால் பிக் பாஸ் டாஸ்க் முடிந்தவுடன் அடுத்த 5 நொடிகளில் வெளியேற வேண்டும் என்றனர். ஆனால், அது சாத்தியமில்லை என ஆண்கள் வாதாடிய நிலையில், 15 நொடிகள், 20 நொடிகள் என உயர்த்தப்பட்டது. 30 நொடிகள் கொடுத்தால் தான் எங்களால் வெளியேற முடியும் என அடம்பிடிக்க ஆண்கள் அணியின் இடத்தில் சென்று தரையில் படுத்துக் கொண்டு சவுந்தர்யா பண்ண அலப்பறை தான் இந்த வார ஹைலைட்டாக மாறியுள்ளது.

வில்லா டு வில்லேஜ்: "யார்ரா அந்த பையன்.. நான் தான் அந்த பையன்" எனும் அசல் கோலாரின் புதிய பாடலை சவுந்தர்யாவுக்குப் போட்டு இவர் ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டு எப்படியெல்லாம் டாஸ்க் விளையாடி இருக்கிறார் பாருங்கள் என ரசிகர்கள் சவுந்தர்யாவின் வீடியோவை தீயாக ஷேர் செய்து வருகின்றனர். ஆண்கள் அணியினரை மதிக்கவே மாட்டேன் என்கிறார் என்றும் படிச்ச பொண்ணு மாதிரியா நடக்கிறார் என்றும் சத்யா உள்ளிட்ட போட்டியாளர்கள் பேச ஆரம்பித்த நிலையில், சவுந்தர்யாவுக்கான சப்போர்ட் பெருகிக் கொண்டே போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X