பிக் பாஸே இன்னும் முதல் சீசனை விட்டு வெளியே வரலையே: அப்ப எப்படி நல்லா இருக்கும் #BiggBoss2Tamil
Recommended Video

சென்னை: பிக் பாஸே இன்னும் முதல் சீசனை விட்டு வெளியே வரவில்லை.
இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டானதை பார்த்து கடந்த ஆண்டு தமிழில் அறிமுகம் செய்து வைத்தார்கள். முதல் சீசன் முடிந்து தற்போது 2வது சீசன் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.
2வது சீசன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் ரொம்பவே சுமாராக உள்ளது.

தேர்வு
பிக் பாஸ் போட்டியாளர்கள் தேர்வு சரியில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. பிக் பாஸ் வீடே பற்றி எரியும்படி சர்ச்சையை ஏற்படுத்துபவர்களை அழைத்து வர முயன்று தோற்றுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

2வது சீசன்
முதல் சீசனில் இருந்தது போன்றே அதே குணாதிசயங்களுடன் ஆட்களை தேர்வு செய்து 2வது சீசனில் போட்டியாளர்களாக்கியுள்ளனர். ஓவியா போன்று யாஷிகாவை ஆக்கலாம் என்று நினைத்து எடுத்துள்ளார்கள். பாவம் சின்னப்புள்ள ஓவியா மாதிரி ஆக நினைத்து ஏதேதோ செய்து கொண்டிருக்கிறது.

ஆட்டிடியூட்
முன்னாள் கவர்ச்சிக் கன்னியான நமீதா போன்று தற்போது மும்தாஜ் உள்ளார். ஆட்டிடியூட் காட்ட காயத்ரி ரகுராம் இருந்தது போன்று தற்போது வைஷ்ணவி உள்ளார். ஜனனி அவ்வப்போது ஆட்டிடியூட் காட்டுகிறார். மமதி சாரி இன்னும் ஆட்டையிலேயே சேரவில்லை.

மகத்
ஹரிஷ் கல்யாண் போன்று நினைத்து அழைத்து வந்த மகத் ராகவேந்திரா ஸ்ரீ போன்று நடந்து கொள்கிறார். ஆனால் ஸ்ரீ போன்று உடனே ஓடிவிட மாட்டார் என்று நம்புவோமாக.

ஷாரிக்
ஆரவ் போன்று ஷாரிக் ஹஸன் வந்துள்ளார். ஆரவ் எப்படி பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் 2 வாரங்கள் இருக்கும் இடம் தெரியாமல் ஆமா போட்டுக் கொண்டிருந்தாரோ ஷாரிக்கும் அதையே தான் செய்கிறார். டாஸ்க் வந்தால் மட்டுமே பேசுகிறார்.

தாடி பாலாஜி
வையாபுரி இல்லாத குறையை தீர்க்க தாடி பாலாஜியை அழைத்து வந்துள்ளனர். பொன்னம்பலத்தை கஞ்சா கருப்புடன் ஒப்பிட முடியாது. வில்லனான பொன்னம்பலம் காமெடி பீஸாக இருக்கிறார்.

சென்றாயன்
டேனி, சென்றாயனை எந்த லிஸ்டிலும் சேர்க்க முடியாது. காமெடி பண்ணுகிறேன் என்ற பெயரில் ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த சீசனில் பிரபலங்களின் பிள்ளைகள் இருந்ததால் இந்த சீசனில் ரம்யா, ஆர்.ஜே. வைஷ்ணவி உள்ளனர். பரணி போன்று ரித்விகா இருக்கிறார். அனந்த் வைத்தியநாதன் எதிலும் ஒட்டாம் உள்ளார்.


Click it and Unblock the Notifications











