செல்லக்குட்டி ஐஸுவைக் காப்பாற்ற பிக் பாஸோட ‘ஸ்ராடஜி’ என்னனு தெரியுமா?

பிக் பாஸ் போட்டியாளர்களின் வாக்குவிபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

By Staff

Recommended Video

செல்லக்குட்டி ஐஸுவைக் காப்பாற்ற பிக் பாஸோட ஸ்ராடஜி- வீடியோ

சென்னை : போட்டியாளர்களின் வாக்கு விபரத்தை வெளிப்படையாக அவ்வப்போது விஜய் டிவி வெளியிட்டு வருவதுகூட, ஐஸ்வர்யாவை வெற்றியாளராக்க பிக் பாஸின் ஸ்ராடஜி தான் எனக் கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இம்முறை 105 நாட்களாக நிகழ்ச்சி நீட்டிக்கப்பட்டிருப்பதால், கடைசி வாரத்தில் டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்களை இம்சிக்காமல் பிளாஷ்பேக்காக ஓட்டி வருகிறார் பிக் பாஸ்.

இது ஒருபுறம் இருக்க, மக்கள் தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்பதால், ஒவ்வொரு போட்டியாளருக்கும் கிடைத்து வரும் வாக்குவிபரம் அவ்வப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

முதலிடத்தில் ரித்விகா:

முதலிடத்தில் ரித்விகா:

கிராண்ட் பினாலேக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், விஜய் டிவி வெளியிட்டு வரும் வாக்கு விபர அடிப்படையில் 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் ரித்விகா முதலிடத்தில் உள்ளார். கடந்த மூன்று வாரங்களாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா இரண்டாம் இடத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் உள்ளார்.

முன்னேறும் விஜி:

முன்னேறும் விஜி:

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஜனனியை வீழ்த்தி சில லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறி வருகிறார் விஜி. வைல்ட் கார்டு மூலம் வீட்டிற்குள் வந்தபோதும், மக்களிடையே இவருக்கு நல்ல ஆதரவு இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

சாதகம்:

சாதகம்:

இத்தனை வாரங்களில் ஒரு சில வாரங்களைத் தவிர, இப்படி போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. இதனை தனக்கு சாதகமாகக் கொண்டே கடைசி நேரத்தில் தனக்குப் பிடித்தமானவரைக் காப்பாற்றி வந்தார் பிக் பாஸ்.

பிக் பாஸின் ஸ்ராடஜி:

பிக் பாஸின் ஸ்ராடஜி:

ஆனால், இம்முறை இப்படி பிக் பாஸ் வெளிப்படையாக வாக்குவிபரத்தைக் கூறுவதிலும் ஒரு ஸ்ராடஜி இருக்கிறது. அதாவது கொஞ்சம் கொஞ்சமாக முதலிடத்தில் இருக்கும் ரித்விகாவின் வாக்குகளுக்கு, ஐஸ்வர்யாவை முன்னேற்றி, கடைசி நேரத்தில் அவரை வெற்றியாளராக அறிவிக்கத் தான் மக்களை இப்படி அவர் தயார் செய்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபலங்களின் கருத்து:

பிரபலங்களின் கருத்து:

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியபோதும், தொடர்ந்து பிக் பாஸுக்கு மிகவும் பிடித்த போட்டியாளராகத் தான் வலம் வருகிறார் ஐஸ்வர்யா. ஆரம்பத்தில் இருந்தே அவர் தான் பிக் பாஸ் பட்டத்தை தட்டிச் செல்வார் என வீட்டிற்குள் இருப்பவர்களும், வெளியில் உள்ள சில பிரபலங்களும் கூறி வருகின்றனர்.

ஐஸ் தான் வின்னர்?

ஐஸ் தான் வின்னர்?

அதனை ஆம் என நிரூபிப்பது போல, ஐஸ்வர்யாவை வெளியேற்ற வலுவான காரணங்கள் இருந்தபோதும், அதனை இருகோடுகள் தத்துவத்தில் சிறியதாக்கி அவரைக் காப்பாற்றி வருகிறார் பிக் பாஸ். அந்த அடிப்படையில் பார்த்தால், மக்களிடம் தற்போது அமோக ஆதரவு பெற்றிருக்கும் ரித்விகாவையும், புது விதமான ஸ்ராடஜியைப் பயன்படுத்தி பின்னுக்கு தள்ளி விட பார்க்கிறார் பிக் பாஸ் என்றே தோன்றுகிறது.

முடிவுகள் மாறலாம்:

முடிவுகள் மாறலாம்:

கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்வர்யாவின் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து, பின்னர் ரித்விகாவின் வாக்குகளுக்கு இணையாக கொண்டு வந்து, கடைசி நேரத்தில் ரித்விகாவைப் பின்னுக்குத் தள்ளி ஐஸ்வர்யா வெற்றியாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் எப்படி மாறினாலும், ‘தேர்தல் முடிவுகளையே மக்கள் வாயை மூடி கைகட்டி வேடிக்கை பார்க்கும் போது, இதை மட்டும் தட்டி கேட்டுவிடவா போகிறார்கள்?' என மய்யமாகப் பேசி கமல் பிக் பாஸ் சீசன் 2வை முடித்து வைக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X