ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற பிளான் ‘பி’யைப் பயன்படுத்தும் பிக் பாஸ்!

இந்தவாரம் எவிக்சன் பிராசஸஸிற்கு ஐஸ்வர்யாவும் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.

By Jaya Chitra

Recommended Video

இந்த வாரமும் ஐஸ்வர்யாவை காப்பாற்ற முயலும் பிக் பாஸ்- வீடியோ

சென்னை: இந்த வாரம் யாஷிகா உட்பட அனைத்துப் போட்டியாளர்களும் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்ய நினைத்தது பிக் பாஸ் நடத்தும் மற்றொரு நாடகமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது பிக் பாஸ் வீட்டில் மொத்தம் எட்டு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் சிலரை இந்த வார எவிக்சனுக்கு நாமினேட் செய்வது தொடர்பான டாஸ்க் நேற்று நடைபெற்றது. இதன்படி, ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு கருத்துவேறுபாடு உள்ள மூன்று போட்டியாளர்களை தனியறை ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவர்களுடன் பேசினர்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட மூன்று போட்டியாளர்களும் தங்களது தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பாக அமைந்தது.

கமலின் கேள்வி:

கமலின் கேள்வி:

கடந்த சில நாட்களுக்கு முன் பிக் பாஸ் மேடையில் தோன்றிய கமல், அகம் டிவி வழியே வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் முன் ஒரு கேள்வியை வைத்தார். அதாவது, ‘உங்கள் சக போட்டியாளர்களில் யார் பிக் பாஸ் இறுதிச்சுற்றிற்கு செல்லத் தகுதியானவர்கள் இல்லை?' என்பது தான் அது.

ஆதங்கம்:

ஆதங்கம்:

இந்தக் கேள்விக்கு சிலர் விஜயலட்சுமி பேரை முன்மொழிந்தார்கள். காரணம் விஜயலட்சுமியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆரம்பம் முதலே பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள். விஜியோ கடந்த வாரம் தான் அங்கு வந்தார். இதனால் தாங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் அவர் பெறவில்லை என்பது மற்றவர்களின் ஆதங்கம்.

நாமினேட் ஆகாதவர்:

நாமினேட் ஆகாதவர்:

இதேபோல், ஐஸ்வர்யா பெயரை ஜனனி, ரித்விகா உள்ளிட்டோர் கூறினர். காரணம் அவர் இதுவரை ஒரு வாரம் கூட நாமினேட் செய்யப்படவில்லை என்பது தான். நாமினேட் செய்யப்பட்டு மக்களின் ஆதரவை அவர் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வெளிப்படையாக சவாலும் விட்டார்கள்.

சர்வாதிகாரி டாஸ்க்:

சர்வாதிகாரி டாஸ்க்:

ஜனனி, ரித்விகாவைப் போலவே மக்களுக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது. இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட வாரங்களில் பிக் பாஸ் ஐஸ்வர்யாவை நாமினேசனில் இருந்து காப்பாற்றி உள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. சர்வாதிகாரி டாஸ்க்கின் போது பாலாஜியின் மீது குப்பையைக் கொட்டி, பலரது வெறுப்புகளைச் சம்பாதித்தார் ஐஸ்வர்யா.

இம்யூனிட்டி பவர்:

இம்யூனிட்டி பவர்:

சமூகவலைதளங்களிலும் அவருக்கு எதிரான பெரும் விமர்சனம் இருந்தது. அந்த வாரம் அவர் நாமினேட் செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் அவர் மக்களின் குறைவான ஆதரவைப் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருப்பார். ஆனால், அந்தவாரம் அவருக்கு இம்யூனிட்டி பவரைக் கொடுத்து பிக் பாஸ் காப்பாற்றினார்.

ஆச்சர்யம் ஆனால் உண்மை:

ஆச்சர்யம் ஆனால் உண்மை:

இந்நிலையில், ஐஸ்வர்யா மீதுள்ள இந்தக் குறையை நீக்கும் பொருட்டு, இந்த வாரம் அனைத்துப் போட்டியாளர்களும் அவரை நாமினேட் செய்யப் பேச அழைத்துச் சென்றனர். யாஷிகாவுமே அவரை அழைத்துச் சென்றது தான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இதனால் பிக் பாஸ் ஆரம்பித்த இந்தப் பதினோறு வாரங்களில் முதன்முறையாக ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸின் திட்டம்?

பிக் பாஸின் திட்டம்?

ஆனால், இதுவும் பிக் பாஸின் திட்டங்களில் ஒன்றாகத் தான் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் பாலாஜி மீது குப்பையைக் கொட்டியதைக் கூட மன்னித்தவர்கள், இந்த ஒரு காரணத்திற்காகவா ஐஸ்வர்யாவை நாமினேட் செய்வார்கள். ஒருவேளை இதுவரை நேரடியாக ஐஸ்வர்யாவைக் காப்பாற்றிய பிக் பாஸின் பிளான் பி-ஆக இது இருக்குமோ என்பது தான் மக்களின் சந்தேகம்.

இது தான் பிளான் பி-யா?

இது தான் பிளான் பி-யா?

எப்போதும் துறுதுறுவென இருக்கும், தன்னைப் பற்றி பேசினாலே பட்டாசாக வெடிக்கும் ஐஸ்வர்யாவும் நேற்று மீ பாவம் போன்றே அடக்கி வாசித்தார். இந்த வாரம் முழுவதும் அவர் இதே போன்று தான் இருப்பார் என எதிர்பார்க்கலாம். இதனால் மக்கள் அவர் மீது பரிதாபம் கொண்டு, அவரை எவிக்சனில் இருந்து காப்பாற்றி விடுவார்கள் என்பது பிக் பாஸின் திட்டமாக இருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X