17.. 17.. அட கஸ்தூரி விசயத்துல இந்த ஒற்றுமையை நோட் பண்ணினீங்களா ரசிகாஸ்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து 17 நாளில் வெளியேறி விட்டார் கஸ்தூரி.

Recommended Video

Bigg Boss 3 Tamil: Kasthuri oppose kamal comments

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் கஸ்தூரி சென்றதற்கும், 17 என்ற எண்ணிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் முலம் போட்டியாளர் ஆனவர் நடிகை கஸ்தூரி. டிவிட்டரில் பரபரப்பாக இயங்கி வந்த கஸ்தூரி, பல சர்ச்சைகளுக்கு வித்திட்டவர். எனவே வெளியே இருந்தது போல் பிக் பாஸ் வீட்டிலும் இருப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே சாக்ஷி, தர்ஷன், ஷெரீன் என எல்லோரையும் வம்புக்கும் இழுத்தார். முதல் நாள் தனக்கு தரப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஹவுஸ்மேட்ஸை தெறிக்கவிட்டார். ஆனால் தொடர்ந்து அவரால் அங்கு விளையாட முடியவில்லை.

வேண்டாத விருந்தாளி

வேண்டாத விருந்தாளி

சொல்லிக் கொள்ளும்படி அவரால் கண்டெண்ட் கொடுக்க இயலவில்லை. பிக் பாஸ் வீட்டில் யாருடனும் அதிகம் நெருங்கிப் பழகாமல் தனித்தீவாக, வேண்டாத விருந்தாளியாகவே கஸ்தூரி இருந்தார். அதற்கு அவர் வெளியில் சம்பாதித்து வைத்திருந்த பெயரும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

எலிமினேட்

எலிமினேட்

இந்நிலையில் கடந்த வாரம் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட கஸ்தூரி, பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று முறைப்படி வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டின் ரகசிய அறைக்கு போக விருப்பமா என கமல் கேட்டதற்கு, இல்லை என தலையசைத்துவிட்டார் கஸ்தூரி. அப்படியே சீக்ரெட் ரூமுக்கு போய் வந்தாலும் அவர் எதுவும் கண்டெண்ட் தந்துவிடப் போவதில்லை என்பதை பிக் பாஸைப் போலவே அவரும் நன்கு அறிந்திருந்தார்.

17ம் எண்ணும், கஸ்தூரியும்

17ம் எண்ணும், கஸ்தூரியும்

இந்த சூழ்நிலையில், கஸ்தூரியின் பிக் பாஸ் வாழ்க்கையில் 17ம் எண் முக்கிய பங்கு வகித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது, 17வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற கஸ்தூரி, 17 நாட்களில் தனது சொந்த வீட்டிற்கு திரும்பிவிட்டார்.

பொங்கி எழுந்தார்

பொங்கி எழுந்தார்

வீட்டிற்குள் இருந்தவரை பொறுமை காத்து வந்தவர், வெளியில் வந்ததும் பொங்கி எழுந்து விட்டார். சக போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் முகத்திரையையும் தன்னால் இயன்ற அளவிற்கு அவர் கிழித்து விட்டார். ஆனால், இதைத்தான் மக்கள் அவரிடம் பிக் பாஸ் வீட்டில் எதிர்பார்த்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X