உள்ளாடை பற்றிய மோசமான விமர்சனம்.. தல பட டயலாக் மூலம் மதுவிற்கு நெற்றியடி பதில் தந்த அபிராமி

தன்னைப் பற்றி தவறாகப் பேசிய மதுமிதாவிற்கு அஜித் பட டயலாக் மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார் அபிராமி.

Recommended Video

Bigg Boss 3 Tamil Abhi reply to Madhumitha | மதுவிற்கு நெற்றியடி கொடுத்த அபி

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளாடை இல்லாமல் அபிராமி அலைந்ததாகக் கூறிய விவகாரத்தில், அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட டயலாக்கை உதாரணமாகக் கூறி மதுமிதாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அபிராமி.

பிக் பாஸ் சீசன் 3ல் 17 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர் நடிகை அபிராமி. பிரபல மாடலான அவர், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, அபிராமி பற்றி மோசமான விமர்சனம் ஒன்றை தெரிவித்திருந்தார்.

மதுவின் குற்றச்சாட்டு

மதுவின் குற்றச்சாட்டு

அதாவது மாலை நேரங்களில் அபிராமி உள்ளாடை கூட அணியாமல், மிகவும் மெல்லிய ஆடையை அணிந்து கொண்டு பிக் பாஸ் வீட்டில் உலா வந்ததாக மது குற்றம் சாட்டி இருந்தார். பிக் பாஸ் வீட்டிற்கு போன இரண்டு நாட்களிலேயே இதைக் கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், இது பற்றி வனிதாவும் தானும் பேசியதாகவும் அவர் கூறியிருந்தார்.

வாட்டர் பாட்டில் குழந்தை

வாட்டர் பாட்டில் குழந்தை

அதோடு, பிக் பாஸ் வீட்டில் அபிராமி வாட்டர் பாட்டிலுக்கு டயாப்பர் கட்டிக் கொண்டு, அது தனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை எனக் கூறிக் கொண்டு சுற்றியது பற்றியும் விமர்சித்திருந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே இந்த விவகாரம் தொடர்பாக மதுவுக்கும், அபிராமிக்கும் சண்டை ஏற்பட்டது.

ஆடை விவகாரம்

ஆடை விவகாரம்

தற்போது வெளியில் வந்த பிறகும் அதே விவகாரத்தை அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, அவர் அபிராமி மற்றும் சாக்‌ஷியின் ஆடை அணியும் முறை பற்றி கடுமையாக விமர்சித்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பிக் பாஸ் வீட்டில் அபிராமி மிக மோசமாக நடந்துக்கொண்டதாகவும் மது குற்றம்சாட்டினார்.

அபிராமி கோபம்

அபிராமி கோபம்

ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முன்கோபக்காரர் என்ற பெயரைப் பெற்றிருந்த அபிராமி, இப்போது தான் அந்த இமேஜை மாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் அவர் மீது மது மீண்டும் இப்படி ஒரு புகார் கூறியது அபிராமியை கோபமடைய வைத்துள்ளது. இதனால் மதுவிற்கு பதிலடி தரும் வகையில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அஜித் பட வசனம்

அஜித் பட வசனம்

அப்பதிவில் அவர், "ப்ளீஸ் யாராவது அவர்களுக்கு நேர்கொண்ட பார்வை படத்திற்கான டிக்கெட்டைக் கொடுங்கள். அதோடு சக போட்டியாளர்களின் ஆடை பற்றி மோசமாக விமர்சித்திருக்கும் அவர்களுக்கு ஒரு கேள்வியும் வைத்திருக்கிறேன். அதாவது, உங்களை உயர்த்திக் காண்பிக்க ஏன் மத்தவங்களை அசிங்கப்படுத்துறீங்க" என அபிராமி தெரிவித்துள்ளார்.

சரியான பதிலடி

சரியான பதிலடி

இந்த வசனமானது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இடம் பெற்ற மிகவும் பிரபலமான வசனம் ஆகும். அதனையே இப்போது சாமர்த்தியமாக மதுவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அபிராமி பயன்படுத்தி இருக்கிறார். அபிராமியின் இந்த பதிவிற்கு மது ஏதாவது பதில் கொடுக்கிறாரா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X