“உள்ளாடை இல்லாமல் சுத்துவார்.. டிரான்ஸ்பரண்டான ஆடையே அணிவார்”.. அபிராமி பற்றி மது ஷாக் ஸ்டேட்மெண்ட்!

பிக் பாஸ் வீட்டில் அபிராமி உள்ளாடை அணியாமல் சுத்துவார் என நடிகை மதுமிதா கூறியுள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Madhumitha slammed abi

சென்னை: பிக் பாஸ் வீட்டில் அபிராமி உள்ளாடை அணியாமல், டிரான்ஸ்ப்ரண்டான ஆடைகளையே அணிந்து கொண்டு சுற்றுவார் என அதிர்ச்சி தரும் வகையில் பேசியுள்ளார் நடிகை மதுமிதா.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறியவர் நடிகை மதுமிதா. கர்நாடகா பிரச்சினை பற்றிய சண்டையில், தன்னைத் தானே கத்தியால் காயப்படுத்திக் கொண்டதால் அவர் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

அவரது வெளியேற்றம் குறித்து பல்வேறு யூகங்கள் உலா வந்த நிலையில், முதன்முறையாக தனது வெளியேற்றத்தின் போது நடந்த சம்பவங்கள் பற்றி பேட்டி அளித்துள்ளார் மதுமிதா. அப்பேட்டியில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பற்றி பல அதிர்ச்சி தரும் விசயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அபிராமியின் ஆடை

அபிராமியின் ஆடை

அதில் ஒரு பகுதியாக தனது சக போட்டியாளரான அபிராமியின் நடவடிக்கைகள் பற்றியும் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார். அதாவது, "பிக்பாஸ் வீட்டில் அபிராமி எந்த உள்ளாடையும் அணிய மாட்டார். மாலையானதும் டிரான்ஸ்ப்ரண்டான ஆடைகளை அணிந்தே அங்கும் இங்கும் வலம் வருவார்.

ஆண்கள் சூழ் வீடு

ஆண்கள் சூழ் வீடு

கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு தமிழ் பெண்ணாக என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் பெண்களைப் போலவே ஆண் போட்டியாளர்களும் உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் உள்ள கேமராமேன்கள் ஆண்கள். எடிட்டர்கள் ஆண்கள்.

எனது கவலை

எனது கவலை

அதுமட்டுமின்றி அவரது காட்சிகளை மக்கள் அனைவரும் பார்ப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படியா ஆடை அணிவது. இதனை என் வீட்டில் உள்ளவர்களும் பார்ப்பார்களே என்ற கவலை எனக்கிருந்தது.

கவுன் பிரச்சினை

கவுன் பிரச்சினை

அதேபோல், தமிழ்ப் பொண்ணு சண்டையில், சாக்‌ஷி என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். அதாவது, ‘தமிழ்ப் பொண்ணு தமிழ்ப் பொண்ணுனு சொல்லிட்டு இப்டி கவுன் போட்டுட்டு சுத்துறியே' என. ஆனால், நானாவது கவுனாவது போட்டேன். சாக்‌ஷியோ உள்ளாடை போன்ற ஆடைகளை மட்டுமே அதிகம் அணிந்திருந்தார்" என இவ்வாறாக மதுமிதா காட்டமாக கூறியுள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

மதுமிதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு நிச்சயம் அபிராமியும், சாக்‌ஷியும் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மது பிரச்சினையில் சிக்கிய போது தானும் உதவியதாக அபிராமி கூறியிருந்தார். ஆனால் அவரைப் பற்றியே மது இப்படி விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X