லாஸ்லியா அப்பாவால் பிக் பாஸ் பார்ப்பதை ஒரேயடியாக நிறுத்திய பிரபலநடிகை.. என்ன டாண் இப்டி பண்ணிட்டீங்க

லாஸ்லியா அப்பா எபிசோடுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதையே நிறுத்திவிட்டதாக நடிகை காஜல் பசுபதி கூறியுள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 80 : Losliya crying for cheran

சென்னை: லாஸ்லியா அப்பா எபிசோடுக்கு பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதையே நிறுத்திவிட்டதாக நடிகை காஜல் பசுபதி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை காஜல் பசுபதி. கோ, கௌரவம் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளரும் கூட.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவி தான் காஜல் பசுபதி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து டிவீட் செய்து வந்தார். இதனால் இவருக்கு பாலோயர்களும் அதிகரித்தனர்.

டிவீட்

டிவீட்

குறிப்பாக சாண்டிக்கு ஆதரவாக பல டிவீட்டுகளை பதிவிட்டார். இதனால் மீண்டும் அவருடன் சேர ஆசைப்படுகிறாரா என நெட்டிசன்கள் கேட்டனர். தனக்கு அதுபோல் எந்த எண்ணமும் இல்லை என பதில் அளித்தது பரவலாக பேசப்பட்ட விஷயம். பிக் பாஸ் பற்றிய நெட்டிசன்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்து வந்தார்.

மனவருத்தம்

மனவருத்தம்

அதேபோல் லாஸ்லியா, கவின் உறவை விமர்சிக்கும் வகையில் நிறைய டிவீட் செய்து வந்தார் காஜல். கடந்த வாரம் லாஸ்லியா அப்பா பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற எபிசோடை பார்த்த பிறகு, மிகவும் மனம் வருந்தி ஒரு டிவீட் செய்தார் அவர். இனி அவர்களை விமர்சித்து டிவீட் செய்ய மாட்டேன் என பதிவிட்டார்.

ரசிகர் கேள்வி

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் பற்றி எந்தவித கமெண்ட்டும் போடாமல் இருந்து வருகிறார் காஜல். இது தொடர்பாக ரசிகர் ஒருவர் காஜலிடன் ஏன் இப்போதெல்லாம் பிக் பாஸ் பற்றி அதிகம் டிவீட் செய்வதில்லை என வினவியுள்ளார். மேலும், தனது பதிவில் அவர், "நீங்கள் போடும் பல நல்ல செய்திகளுக்கு குறைவான லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகள் வருகிறது .ஆனால் பிக் பாஸ் தமிழ் பற்றி போட்டால் மக்கள் அதிகம் ரசிகிறர்கள்", என கேட்டுள்ளார். .

லைக்குகளுக்காக இல்லை

அதற்கு பதிலளித்துள்ள காஜல், தான் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதையே நிறுத்திவிட்டதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். "நான் லைக்ஸ்க்குகாக தான் பிக் பாஸ் பற்றி டிவீட் செய்தேன் என நினைக்கிறாயா கண்ணா? நிச்சயமாக இல்லை.

லாஸ்லியா அப்பா

லாஸ்லியா அப்பா

நான் லைக்ஸுக்காக பிக் பாஸ் பற்றி டிவீட் செய்யவில்லை. லாஸ்லியா அப்பா எபிசோடுக்கு பிறகு நான் பிக் பாஸ் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். அதனால் தான் எந்த டிவீட்டும் செய்யவில்லை", என அவர் பதில் அளித்துள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

சாண்டியின் இரண்டாவது மனைவி மற்றும் குழந்தை உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற காட்சிகளைக்கூட காஜல் பார்க்கவில்லையாம். பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்நிகழ்ச்சியின் நிறை, குறைகளை தரமாக விமர்சித்து வரும் காஜல், திடீரென நிகழ்ச்சியைப் பார்ப்பதை நிறுத்தி விட்டதாக கூறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அழுகாச்சி காட்சிகள்

அழுகாச்சி காட்சிகள்

காஜலின் இந்தப் பதிவிற்கு பதில் அளித்துள்ள பலரும், தாங்களும் அதே போல் பிக் பாஸ் பார்ப்பதை நிறுத்தி விட்டதாகக் கூறியுள்ளனர். சீரியல் போல் ஒரே அழுகாச்சி காட்சிகளாக இருப்பதால் பிக் பாஸ் மீது வெறுப்பு வந்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X