பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ரகளை.. தவறாக நடந்து கொண்ட கவின்.. கோபத்தில் கேமராவை உடைத்த கஸ்தூரி?

பிக் பாஸ் வீட்டில் கவினுக்கும், கஸ்தூரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

களத்தில் குதித்த கஸ்தூரி.. கிளம்பியது அடுத்த பஞ்சாயத்து

சென்னை: பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ரகளை ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை கவின் கஸ்தூரியிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அதனால் கோபத்தில் கஸ்தூரி கேமரா ஒன்றை அடித்து நொறுக்கியதாகவும் சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வைரலாகியுள்ளது.

கடந்த இரண்டு சீசன்களை விட பிக் பாஸ் 3வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதற்குக் காரணம் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான, பரபரப்பான கண்டெண்டுகளைக் கொடுத்து வருவது தான்.

அந்தவகையில் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கவினுடன் மோதல்

கவினுடன் மோதல்

இம்முறை கவினுக்கும், கஸ்தூரிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த சண்டையின் போது தீயநோக்கத்தில் கவின் தன்னைத் தொட்டதாக கஸ்தூரி பிக் பாஸிடம் புகார் கூறியுள்ளார். இதனால், தன்னை உடனே வெளியே அனுப்பும்படி அவர் கேட்டுள்ளார்.

கேமரா உடைப்பு

கேமரா உடைப்பு

அதோடு, கோபத்தில் ஒரு கேமராவை அவர் உடைத்து விட்டதாகவும், பிக் பாஸ் படப்பிடிப்பு சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வைரலாகப் பரவி வருகிறது. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. நிகழ்ச்சியில் காட்டினால் தான் அது உண்மையா பொய்யா என்பது தெரிய வரும்.

மது விவகாரம்

ஆனால், கடந்த வியாழனன்று இரவு மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்ததாக ஒரு தகவல் வெளியானது. முதலில் அதை மக்கள் நம்பவில்லை. ஆனால், நேற்று முதல் புரொமோவிலேயே அதனை காண்பித்தார்கள். மதுமிதாவும் கையில் காயத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

காவிரி பிரச்சினை

காவிரி பிரச்சினை

அதோடு, சம்பவத்தன்று பிக் பாஸ் வீட்டில் கர்நாடகா மற்றும் காவிரி பிரச்சினை பற்றி மதுவுக்கும், ஷெரீனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தேவையில்லாத பிரச்சினையில் சிக்க விரும்பாத பிக் பாஸ், அது தொடர்பான காட்சிகளை டிவியில் காட்டவில்லை. ஆனாலும், சமூகவலைதளங்களில் அந்த விவரம் வெளியானது.

தயாரிப்புக் குழு

தயாரிப்புக் குழு

பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பில் மிகப் பெரிய குழுவே பின்னணியில் இயங்கி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்களை கசிய விடுவது போல, பிக் பாஸ் குழுவில் இருந்து இது போன்ற தகவல்களை யாரோ கசிய விடுகிறார்கள் எனத் தெரிகிறது.

கருப்பு ஆடு

கருப்பு ஆடு

தற்போது கவின், கஸ்தூரி சண்டையையும் பிக் பாஸ் தொழில்நுட்பக் கலைஞர் யாரோ தான் வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து, அவருக்கும் கவினுக்கும் இடையே தான் மோதல் அதிகமாக உள்ளது. கஸ்தூரி கவினை வாண்டடாக வம்புக்கு இழுப்பது அடிக்கடி நடக்கிறது.

பட்டபெயர்

பட்டபெயர்

கடந்த வெள்ளியன்று நடந்த சண்டையின் போது கூட, கவின் கோபத்தில் கஸ்தூரியிடம் ‘உன்னை சாகடிச்சுடுவேன் பார்த்துக்க' எனக் கூறி இருந்தார். அதோடு, கஸ்தூரிக்கு காகா என்ற பட்டப்பெயரும் அவர் வைத்துள்ளார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, வைரலாகி வரும் கவின் கஸ்தூரி சண்டை நிஜமாக இருப்பதற்கே சாத்தியக்கூறுகள் அதிகம். பார்ப்போம் அதை எபிசோட்டில் காட்டுகிறார்களா என.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X