‘வாயாடி பெத்தபுள்ள..’ சிச்சுவேசன் பாட்டு போட்டு அசிங்கப்படுத்திய பிக் பாஸ்.. சிரித்து சமாளித்த வனிதா
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதாவின் குழந்தைகள் வரும் போது, 'வாயாடி பெத்த புள்ள' பாடலை போட்டு செமையாக கலாய்த்துள்ளார் பிக் பாஸ்.
எத்தனை பேர் இருந்தாலும், ஒரு சிலர் இல்லை என்றால் சபை நிறையாது என்பார்கள். அப்படி சபையை நிறைப்பவர் தான் வனிதா. எதையாவது பேசி, யாரையாவது வம்பிழுத்து, ஏதாவது பிரச்சினையை கூட்டி என ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருப்பார்.
அவரது இந்த குணம் தான் பிக் பாஸ்க்கு மெயின் கண்டென்ட். அதன் காரணமாகவே வெளியே போனவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் அவர்.

வத்திக்குச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவுக்கு தர்ஷன் வைத்த பெயர் வத்திக்குச்சி. அதுவே அவருக்கு பொருந்தி போக, இப்போது மக்கள் அவரை வத்திச்குச்சி என்றே அழைக்க தொடங்கிவிட்டனர். சமூக வலைதளங்களில் வத்திக்குச்சி என சர்ச் செய்தால், வனிதாவின் பெயர் தான் விடையாக வருகிறது. அந்தளவுக்கு அவரது பெயர் பிரபலமாகியுள்ளது.

வாயாடி பெத்தபுள்ள
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 2வது புரொமோவில், வனிதாவின் இரண்டு மகள்களும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது, கனா படத்தில் வரும் 'வாயாடி பெத்தப்புள்ள' பாடலை ஒலிக்கவிடுகிறார் பிக் பாஸ். இதை கேட்டு வனிதாவே விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

வனிதாவுக்கு மகிழ்ச்சி
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு அம்மாவை (வனிதா) பார்த்த இரண்டு மகள்களும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கின்றனர். வனிதாவும் சிறு குழந்தையாக மகள்களைப் பார்த்து ஓடுகிறார். பிறகு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அந்த சிறுமிகளுடன் கண்ணாமூச்சு, ஓடிப்பிடிச்சு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர்.
கிரேட் பிக் பாஸ்
'வாயாடி பெத்தப்புள்ள' பாடல் போட்டதை கேட்டு, வனிதாவே சிரிக்கத்தான் செய்தார். அப்படியிருக்கையில் நெட்டிசன்கள் விட்டு விடுவார்களா. அதனை கமெண்ட் செய்து வருகின்றனர். "வாயாடி பெத்தப்புள்ள... போட்டாரு பாருய்யா பிக் பாஸ் ஒரு பாட்டை", என இவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏமாற்றம்
"யாரெல்லாம் விஜயகுமார் வருவார் என்று ஆசைப்பட்டு ஏமாந்து போனிங்க", என இவர் கேட்டுள்ளார். அதற்கு என்ன காரணம் என்றால், விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. சமீபத்தில் கூட தனது வீட்டை ஆக்ரமித்து கொண்டதாக வனிதா மீது விஜயகுமார் போலீசில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தர்ஷன் குடும்பம்
முன்னதாக வெளியான முதல் புரொமோவில் தர்ஷனின் தாய் மற்றும் தங்கை வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அப்போது, நியூ படத்தில் வரும் "காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா", ஒலிக்கிறது. தர்ஷன் துள்ளிகுதித்து சென்று தாய் கட்டியணைத்து கொள்கிறார். ஆக, இன்றைய எபிசோடில் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், செம கலாட்டாக்களும் இருக்கும் என்றே தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











