போட்டு வாங்கிய சாண்டி.. சாக்‌ஷியின் பழி வாங்கும் பிளானை உளறிக் கொட்டிய அபி.. உஷாரான பாய்ஸ் கேங்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 :Day 72 : Vanitha is Back

சென்னை: பழி வாங்கும் நோக்கத்தோடு தான் சாக்ஷி வந்திருக்கிறார் என்பதை அபி மூலம் பாய்ஸ் கேங் கண்டுபிடித்து விட்டார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார் சாக்ஷி. அவருடன் மோகன் வைத்யா மற்றும் அபிராமியும் வந்துள்ளனர். இவர்களது வருகை பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய டிவிஸ்ட்டை ஏற்படுத்தியுள்ளது.

சாக்ஷி எவிக்ட் ஆவதற்கு முன்பு கவின், லாஸ்லியாவுடன் சேர்த்து முக்கோண காதல் கதை ஒன்று பிக் பாஸ் வீட்டில் ஓடியது. இதனால் சாக்ஷியின் இமேஜ் கடுமையாக டேமேஜ் ஆனது.

ஸ்நேஷி.. விஷம்..

ஸ்நேஷி.. விஷம்..

பிக் பாஸ் ரசிகர்கள் சாக்ஷியை, ஸ்நேக்ஷி, விஷம் என பட்டப்பெயர் வைத்து அழைத்தனர். சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்தனர். கவின் - லாஸ்லியா இடையே தேவையில்லாமல் சாக்ஷி விளையாடுகிறார் என குற்றஞ்சாட்டப்பட்டது. கடைசியில் எவிக்ஷனில் குறைந்த வாக்குகள் கிடைத்ததால் அவர் வெளியேற்றப்பட்டார்.

கவின் தான் காரணம்

கவின் தான் காரணம்

சாக்ஷிக்கு கெட்டப் பெயர் கிடைத்ததற்கு கவின் தான் காரணம் என்பது வனிதா உள்ளிட்டோரின் குற்றச்சாட்டு. பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களை கவின் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதும் அவர் மீதான புகார். இதன் காரணமாக தான் அவர் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டு வருகிறார். இந்த வாரமும் எவிக்ஷன் லிட்டிலும் கவின் பெயர் உள்ளது.

சாக்‌ஷியின் கோபம்

சாக்‌ஷியின் கோபம்

வெளியில் சென்ற பிறகுதான் தன் பெயர் எந்தளவிற்கு டேமேஜ் ஆகி இருக்கிறது என்பது சாக்‌ஷிக்கு தெரிய வந்தது. இதனால் கவின் மற்றும் லாஸ்லியா மீது அவர் கடும் கோபத்தில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் மீண்டும் அவருக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினராகச் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பழிக்கு பழி

பழிக்கு பழி

பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ள சாக்ஷி கவினை பழிக்கு பழி வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்ததும் வராததுமாக வனிதாவுடன் சேர்ந்து, வேலையை ஆரம்பித்துவிட்டார் சாக்ஷி. அவருடைய பார்வையே கவினுக்கு பீதியை கிளப்பும் வகையில் உள்ளது.

பாய்ஸ் கேங்

பாய்ஸ் கேங்

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவில் அபிராமியுடன் பேசிக்கொண்டிருக்கிறது பாய்ஸ் கேங். அப்போது சாண்டி அபிராமி பார்த்து, "நீ மட்டும் தான் போன மாதிரியே திரும்பி வந்திருக்க. மற்ற ரெண்டும் ரிவெஞ்சு எடுக்க தான் வந்திருக்கு", என்கிறார்.

ரகசியத்தை உடைத்த அபி

ரகசியத்தை உடைத்த அபி

அதற்கு, "ஆமா அது ப்ரீ பிளானிங். எனக்கு தெரியவே தெரியாது", என சாக்ஷியின் திட்டத்தை போட்டுடைக்கிறார் அபிராமி. பழிவாங்குவோர் லிஸ்டில் தற்போது மோகன் வைத்யாவும் இணைந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. "நைனா புல் பீக்கில் இருக்கிறார்", என சாண்டி கூறுகிறார்.

பழி வாங்கும் வாரம்

பழி வாங்கும் வாரம்

ஆக பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பழி வாங்கும் வாரம். யார் யாரை பழி வாங்கப் போகிறார்கள், யார் மாட்டப்போகிறார், யார் தப்பிக்க போகிறார் என ஆட்டம் களை கட்டப் போகிறது. இவர்கள் அரங்கேற்றப் போகும் இந்த டிராமாவின் ரிசல்ட் வார இறுதியில் தெரியவரும். பார்ப்போம் கவின் தப்பிக்கிறாரா? இல்லை கவிழ்கிறாரா? என்பதை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X