அட பிக் பாஸ் வீட்ல இப்டிகூட நடக்குமா.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய சேரன்.. கவினுக்கு ஒரு சபாஷ் பார்சல்!
கவினை சேரன் பாராட்டியதைக் கண்டு ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: கவினிடம் சேரன் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என ஆச்சர்யம் அடைந்துள்ளனர் ரசிகர்கள்.
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே வயதின் அடிப்படையில் போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து செயல்படுகின்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதிலும் குறிப்பாக சேரனுக்கும், கவினுக்கும் தான் நீண்ட நாள் பகை உள்ளது.
அதற்கு முக்கியக் காரணம் லாஸ்லியாவும் தான். பெரும்பாலும் லாஸ்லியாவை வைத்து தான் அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்படும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டாமல் விடுவதில்லை.

குறைகள்
வாராவாரம் இருவருமே பெரும்பாலும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி நாமினேட் செய்து வருகின்றனர். அதோடு, சேரன் கவினைப் பற்றியும், கவின் சேரனைப் பற்றியும் குறைகளை மட்டுமே சொல்லி வருகின்றனர். இதுவரை அவர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டியதே இல்லை.

மிரள வைத்த கவின்
இந்நிலையில் நேற்று தரப்பட்ட சுமை தூக்கும் டாஸ்க்கில் கவின் கடைசி வரைப் போராடினார். இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று டாஸ்க்கில் அவர் விளையாடிய விதம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த அனைத்துப் போட்டியாளர்களும் அவரைப் பாராட்டினர்.

சேரன் பாராட்டு
குறிப்பாக சேரன் பாராட்டியது மக்களை ஆச்சர்யம் அடைய வைத்துள்ளது. ‘சூப்பரா விளையாடுனடா தம்பி' என சேரன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு கவின் ஆர்மியினர் மயக்கம் போட்டு விழாத குறை தான். அதிலும் குறிப்பாக அவர் தம்பி எனக் கூறியதை ரீவைண்ட் மோடில் போட்டு கேட்டு வருகின்றனர் அவர்கள்.

யோசனையில் ஆர்மி
இதுவரை சமூகவலைதளப் பக்கங்களில் சேரன், கவின் ஆர்மியினர் சண்டை அதிகம் இருந்து வந்தது. இனியாவது இந்த நிலை மாறுமா இல்லை இதை வைத்தும் அவர்கள் புதிய சண்டை போடுவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











