For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“பிக் பாஸ் வீட்டை உடைத்து சேரனை யாரும் காப்பாற்றத் தேவையில்லை”.. அமீருக்கு சரியான பதிலடி தந்த கமல்!

|
Bigg Boss வீட அடிச்சு நொறுக்கி Cheran-ன காப்பாத்த போறேன்- வீடியோ

சென்னை: சேரனை பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் காப்பாற்றத் தேவையில்லை என இயக்குநர் அமீரின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக கமல் பேசியிருக்கிறார்.

கடந்த இரண்டு சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களைப் பார்த்து மக்கள் ஆச்சர்யம் தான் அடைந்தார்கள். ஆனால், இம்முறை இயக்குநர் சேரனும் போட்டியாளராக களமிறங்கியது மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. பொதுமக்களை மட்டுமின்றி, திரையுலகைச் சேர்ந்தவர்களும் சேரன் தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்து விட்டதாகவே விமர்சித்தனர்.

தேசிய விருதுகள் வாங்கிய இயக்குநர், இப்படி பிக் பாஸ் வீட்டில் அசிங்கப்படுகிறாரே என பலர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

அமீர் கோபம்

அமீர் கோபம்

சமீபத்திய படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் அமீர், ‘பிக் பாஸ் வீட்டில் சேரன் படும் அவமானங்களைக் காணச் சகிக்கவில்லை. பிக் பாஸ் வீட்டை உடைத்து அவரை வெளியில் கொண்டு வர விரும்புவதாகவும், ஆனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும்' பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இயக்குநர்கள் ஆதங்கம்

இயக்குநர்கள் ஆதங்கம்

அதற்கு முன்னரும் கூட சரவணன் மற்றும் மீரா விவகாரங்களின் போது, ரமேஷ் கண்ணா, இயக்குநர் வசந்தபாலன், மனோபாலா உள்ளிட்டோர் சேரனுக்காக குரல் கொடுத்தனர். நடன இயக்குநர் கலா மாஸ்டரும் கூட, சேரனை இப்படிப் பார்ப்பது பாவமாக இருக்கிறது என பேட்டியொன்றில் கூறி இருந்தார்.

மக்களின் கேள்வி

மக்களின் கேள்வி

சேரனின் ரசிகர்களிடமும் இந்த ஆதங்கம் பரவலாகவே இருந்து வருகிறது. முந்தைய சீசன்களைப் பார்த்தும் சேரன் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்ற கேள்வி பலரது மனதிலும் உள்ளது. ஆனால், சேரன் சிறிய குழந்தையல்ல. பலரது வாழ்வோடும் சம்பந்தப்படுத்திக் கொள்ளும்படியான ஜனரஞ்சகமான படங்களைக் கொடுத்தவருக்கு பிக் பாஸ் புதிதாக கற்றுக் கொடுக்க ஒன்றுமில்லை.

சேரனின் கவனம்

சேரனின் கவனம்

அதோடு, அங்கு தனது நிலை பற்றி அவர் நன்றாகவே அறிந்திருக்கிறார். அவரை யாரும் அங்கே கடத்திக் கொண்டு போய், அடைத்து வைக்கவில்லை. அவராகவே விருப்பப்பட்டுதான் பிக் பாஸில் விளையாடி வருகிறார். மற்றவர்களைப் போலவே அவருக்கும், தனது பெயரை நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் கவனம் இருக்கிறது. அவரும் மிகவும் கவனமாகத் தான் விளையாடி வருகிறார்.

கமல் பதிலடி

கமல் பதிலடி

இப்படி இருக்கையில் சேரனை காப்பாற்ற வேண்டும், அதுவும் பிக் பாஸ் வீட்டை உடைத்து என்றெல்லாம் அமீர் ஆவேசமாகப் பேசியது பிக் பாஸ் காதுகளுக்கும் எட்டி விட்டது போலும். நேற்றைய எபிசோட்டில் கமல் இதற்கு பதிலடி தரும் விதமாக விளக்கமாகப் பேசிவிட்டார்.

கே.எஸ்.ரவிக்குமார் விளக்கம்

கே.எஸ்.ரவிக்குமார் விளக்கம்

முன்னதாக போட்டியாளர்களின் ஆசிரியர்கள் பேசிய ஆடியோக்கள் வரிசையாக ஒலிபரப்பப்பட்டது. அதில் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சேரன் பற்றி பேசினார். குருவுக்கு ஏற்ற சிஷ்யன் என சேரனை அவர் பாராட்டினார். அப்போதே மற்ற இயக்குநர்களின் பேச்சுக்கு அவர் விளக்கம் கொடுத்தார்.

அவமானம் இல்லை

அவமானம் இல்லை

அதாவது, அனுபவம் புதுமை என்ற படத்திற்காக சேரன் வெளிநாடு சென்றிருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் எல்லாம் நமது வேலைகளை நாமே தான் செய்து கொள்ளவேண்டும். எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் அந்த நிலைமை தான். எனவே, பிக் பாஸ் வீட்டில் சேரன் பாத்ரூமை சுத்தப்படுத்துவது அவருக்கு அவமானம் இல்லை.

ஆவேசமான கமல்

ஆவேசமான கமல்

அவர் வெளிநாட்டில் படப்பிடிப்புக்காக தங்கி இருந்து இந்த வேலையைச் செய்வதாக நினைத்துக் கொள்ளுங்கள். அவர் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே அங்கிருக்கிறார் என்பதை தெளிவு படுத்தினார் கே.எஸ்.ரவிக்குமார். அவரைத் தொடர்ந்து பேசிய கமலும், சற்று ஆவேசமாக இதே கருத்தை முன்வைத்தார்.

ஓரவஞ்சனை

ஓரவஞ்சனை

மற்ற போட்டியாளர்களோடு ஒப்பிடுகையில் சேரனை பிக் பாஸ் மிகவும் உயர்வாகவே நடத்துகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு பெரிய உடல் ரீதியாக டாஸ்க் எதுவும் கொடுப்பதில்லை. பெரும்பான்மையான டாஸ்க்குகளில் அவரை நடுவராக்கி விடுகிறார்.

டைட்டில் வின்னர்?

டைட்டில் வின்னர்?

சர்ச்சைகளில் சிக்கிய போதும், சேரனுக்கு ஆதரவாகவே பிக் பாஸ் செயல்பட்டு வருகிறார். இம்முறை சேரனுக்கே டைட்டில் கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக சமூகவலைதளத்தில் ஒரு பேச்சு உலா வருகிறது. அதனால் தான் பிக் பாஸ் அவருக்கு சப்போர்ட் செய்வதாக கூறப்படுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

English summary
While speaking in the bigg boss tamil 3 show, actor Kamal said that there is no need for anyone to save director Cheran from bigg boss. Its his reply to Ameer's statement on Cheran. சமீபத்திய படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் அமீர், ‘பிக் பாஸ் வீட்டில் சேரன் படும் அவமானங்களைக் காணச் சகிக்கவில்லை. பிக் பாஸ் வீட்டை உடைத்து அவரை வெளியில் கொண்டு வர விரும்புவதாக’ பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது பிக் பாஸ் காதுகளுக்கும் எட்டி விட்டது போலும். நேற்றைய எபிசோட்டில் கமல் இதற்கு பதிலடி தரும் விதமாக விளக்கமாகப் பேசிவிட்டார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more