சேரனின் சீக்ரெட் ரூம் டாஸ்க் வெற்றி.. வசமாக சிக்கி கொண்ட கவின்.. மக்கள் மத்தியில் கிழிந்தது முகமூடி!

சேரனின் சீக்ரெட் ரூம் டாஸ்க் மூலம் கவினின் முகமூடியை அவர் கிழித்துள்ளார்.

Recommended Video

Watch Video : Bigg Boss 3 Tamil: Vanitha crying for cheran

சென்னை: சேரனை பிக் பாஸ் எதற்காக ரகசிய அறைக்கு அனுப்பினாரோ அந்த வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இயக்குனர் சேரன், அதே வீட்டின் மற்றொரு பகுதியில் உள்ள ஒரு ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே பிக் பாஸ் வீட்டில் நடப்பவற்றை டிவி மூலமாக பார்த்தும், கேட்டும் வருகிறார்.

சேரன் ரகசிய அறையில் இருப்பது ஹவுஸ்மேட்ஸ்க்கு தெரியாது. எனவே அவர் இல்லாத சமயத்தில் சேரனை பற்றி சக போட்டியாளர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அவரால் தெரிந்துகொள்ள முடியும்.

 பீலிங்கில் போட்டியாளர்கள்

பீலிங்கில் போட்டியாளர்கள்

கடந்த சீசன்களில் நடந்தது போல் இதுவரை சேரனை சக போட்டியாளர்கள் யாரும் தவறாக எதுவும் பேசவில்லை. மாறாக வனிதா, ஷெரீன், லாஸ்லியா போன்றோர் சேரனை நினைத்து மிகவும் வேதனைப்பட்டனர். அவர் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சோம்பேறித்தனமாக இருக்கும் கவினுக்கு மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்றும் வனிதா ஷெரினிடம் கூறி வருத்தப்பட்டார்.

வனிதா மனநிலை

வனிதா மனநிலை

இந்த சூழ்நிலையில், நேற்றைய எபிசோடில் கேப்டன் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் லாஸ்லியா, தர்ஷன், வனிதா ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் வனிதாவுக்கு முதலில் இருந்தே இந்த போட்டியில் கலந்து கொள்வதில் இஷ்டம் இல்லை. சேரனின் வெளியேற்றத்தால் தானும் பிக் பாஸில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார் வனிதா.

விலகல்

விலகல்

எனவே, தலைவர் பதவிக்கான போட்டியில் தான் விலகிக்கொள்ள முடியுமா என பிக் பாஸிடம் அவர் கேட்டார். அதற்கு வாய்ப்பில்லை என பிக் பாஸ் கூறிவிட்டதால், வேறு வழியில்லாமல் அவர் போட்டியில் கலந்துகொண்டார். ஆனால் போட்டி ஆரம்பித்த உடனேயே வனிதா விலகிக்கொண்டார்.

இந்த வார கேப்டன்

இந்த வார கேப்டன்

தர்ஷனும் கால் வலிப்பதாகக் கூறி உடனடியாக வெளியேறியதால் லாஸ்லியா கேப்டன் ஆனார். எனவே இந்த வாரம் லாஸ்லியாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது. இதனால் இந்த வாரம் வனிதா, சாண்டி, ஷெரின், தர்ஷன் ஆகிய நான்கு பேர் போட்டியாளர்கள் மூலம் நாமினேட் செய்யப்பட்டனர். கவின் ஏற்கனவே நேரடியாக நாமினேஷனில் இருக்கிறார்.

கவின் பேச்சு

கவின் பேச்சு

இந்த வழக்கமான நடைமுறைகள் எல்லாம் முடிந்த பின்னர், வழக்கம் போல் லாஸ்லியாவிடம் கவின் பேசிக்கொண்டிருந்தார். அப்போது காதல் விஷயங்கள் பற்றி கவின் பேச ஆரம்பித்தார். லாஸ்லியா பிடிகொடுக்கவில்லை என்றாலும், கவின் தொடர்ந்து காதல் விவகாரம் பற்றியே பேசினார்.

சேரன் புகார்

சேரன் புகார்

இந்த உரையாடலை ரகசிய அறையில் இருந்தபடி சேரன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஆடியன்ஸை பார்த்து, "காதல் விவகாரம் பற்றி இனி பேச மாட்டோம் என இருவரும் சத்தியம் செய்திருக்கிறார்கள். இந்த வாரம் கவின் நாமினேஷனில் இருப்பதால், லாஸ்லியாவிடம் காதல் விஷயத்தை பற்றி பேச போர்ஸ் செய்கிறார். எப்போதும் அவர் இதை தான் செய்கிறார்' எனக் கூறினார்.

தொடரும் வேட்டை

தொடரும் வேட்டை

இதன் மூலம் சேரனின் ரகசிய அறை ஆப்ரேஷனில் முதல் சக்சஸ் கிடைத்துள்ளது. கவினின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது, இனியும் கவின் அடங்கப்போவதில்லை. இந்த வாரம் தப்பிப்பதற்காக இதே வேலையை தொடர்வார். எனவே சேரன் இனி அடிக்கடி ஆடியன்சிடம் கதைப்பார் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X