“பிரண்டு பிரண்டுனு சொல்லிட்டு.. அப்போ அதுக்கெல்லாம் ஏன் அலோ பண்ணின?”.. கோபமாக முகெனை திட்டிய சேரன்!

அபி பிரச்சினையின் போது, முகென் மேலும் கோபப்பட்டு விடாமல் சேரன் பார்த்துக் கொண்டார்.

சென்னை: நட்பாகத்தான் பழகுகிறேன் எனச் சொல்லி விட்டு, அபிராமி அதிக உரிமையுடன் பழக ஏன் அனுமதித்தாய் என முகெனின் கோபமாக கேள்வி எழுப்பினார் சேரன்.

பிக் பாஸ் வீட்டில் எல்லாப் பிரச்சினைகளின் போது, நடுநிலையாக நின்று தனது கருத்துக்களை எடுத்துக் கூறுவது சேரனின் வழக்கம். அவர் பிரச்சினைகளில் சிக்கிய போது கூட நிதானமாகத்தான் அதனைக் கையாண்டார்.

நேற்று முகென், அபிராமி பிரச்சினையின் போது கூட அப்படித்தான், அவர் தனது கோபங்களை எல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு, முகென் அதிக உணர்ச்சிவசப்படாமல் பார்த்துக் கொண்டார்.

நல்ல அப்பா:

நல்ல அப்பா:

பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவைப் போலவே தர்ஷனும், முகெனும் கூட சேரனை அப்பாவாகத்தான் பாவித்து வருகின்றனர். எனவே, தன் பிள்ளைகள் எந்தப் பிரச்சினையிலும் சிக்கி விடக் கூடாது என கவனமாக அவர்களைப் பார்த்துக் கொள்கிறார் சேரனும். ஆனால், சமயங்களில் நிலைமை கை மீறிப் போய் விடுகிறது.

அறிவுரை:

அறிவுரை:

அந்த சமயங்களில் தன் எல்லை அறிந்து ஒதுங்கி நின்று கொள்கிறார் சேரன். தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளைகள் தோழன் என்ற பார்முலாவைத் தான் பிக் பாஸ் வீட்டில் அவர் கடைபிடித்து வருகிறார். இருந்தபோதும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரைக் கூறத் தவறுவதே இல்லை.

முகென் விவகாரம்:

முகென் விவகாரம்:

அந்தவகையில் நேற்று அபிக்கும், முகெனுக்கும் பிரச்சினை ஏற்பட்ட போது, முகெனின் கோபத்தைக் கட்டுப்படுத்த தன்னால் ஆன முயற்சிகளை அவர் செய்தபடியே இருந்தார். ஏற்கனவே முகெனின் கோபத்தை பிக் பாஸ் போட்டியாளர்கள் பார்த்திருக்கிறது. அதனால் இம்முறை அவர் இன்னும் உக்கிரமாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் சேரன்.

கட்டுப்பாடு:

கட்டுப்பாடு:

கஸ்தூரி, வனிதா, மது உள்ளிட்டோர் மேலும் ஆத்திரப்படுத்திய போது கூட, அவர் தன்னால் முடிந்த அளவு முகெனுக்கு உறுதுணையாகவே இருந்தார். முகென் சேரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தான் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார் என்பது நன்றாகவே தெரிந்தது.

சேரனின் கோபம்:

சேரனின் கோபம்:

படுக்கையறையில் முகெனுக்கு அறிவுரை கூறியபோது கூட, ‘பிரண்டு பிரண்டுனு சொல்லிட்டு அபியை முதுகுல குதிரை ஏற எல்லாம் ஏன் சம்மதிச்ச?' என கடிந்து கொண்டார். அப்போது தான் அபி தான் அப்படி தான் எதிர்பார்க்காத வேளையில் நடந்து கொண்டதாக முகெனும் விளக்கமளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X