சேரனுக்கு செக்.. லாஸ்லியாகிட்ட இனி பேசக்கூடாது.. கண்டிஷன் போட்ட ரியல் மகள்.. அப்போ ரீல் மகள் நிலைமை?

லாஸ்லியாவுடன் இனி பேசக்கூடாது என சொந்தமகள் கண்டிஷன் போட்டுள்ளதால் குழப்பத்தில் இருக்கிறார் இயக்குனர் சேரன்.

சென்னை: லாஸ்லியாவுடன் இனி பேசக்கூடாது என இயக்குனர் சேரனிடம் கண்டிஷன் போட்டுள்ளார் அவரது சொந்தமகள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் முக்கிய போட்டியாளராக இயக்குனர் சேரன். இந்த சீசனில் சேரனை சுற்றி தான் பல சர்ச்சைகள் எழுந்தன. சரவணன் விவகாரம், மீராவின் குற்றச்சாட்டு, கவின் - லாஸ்லியா காதல் என பலவகையான பரபரப்புகளுக்கு ஆளானார்.

சேரனை எப்படியாவது வெளியே அழைத்து வரவேண்டும் என வசந்தகுமார், அமீர் போன்ற இயக்குனர்கள் வலியுறுத்தினர். இதற்கெல்லாம் கே.எஸ்.ரவிக்குமார் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் பிக் பாஸ்.

சேரனை சுற்றி சுழலும் பிக் பாஸ்

சேரனை சுற்றி சுழலும் பிக் பாஸ்

இருந்தாலும் சேரனை சுற்றியே தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சுழன்று கொண்டிருக்கிறது. வெளியே அனுப்பப்பட்ட அவர், இரண்டு நாட்கள் சீக்ரெட் ரூமில் இருந்துவிட்டு மீண்டும் வந்துவிட்டார். லாஸ்லியாவை மகள் போல் பார்ப்பதால், இன்னும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகிறார்.

புதிய சிக்கல்

புதிய சிக்கல்

தற்போது அதில் ஒரு புதிய சிக்கலாக வந்துள்ளார் சேரனின் சொந்த மகள். பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்கள் வந்து 80 நாட்கள் கடந்துவிட்டதால், அவர்களை உற்சாகப்படுத்த குடும்பத்தினரை உள்ளே அனுப்பி வைக்கிறார் பிக் பாஸ். முகென், லாஸ்லியா குடும்பத்தினர் ஏற்கனவே வந்து சென்ற நிலையில், தற்போது சேரனின் குடும்பத்தார் அவரை பார்க்க வந்துள்ளனர்.

சொந்த மகளின் நிபந்தனை

சொந்த மகளின் நிபந்தனை

இன்று வெளியாகியுள்ள மூன்றாவது புரொமோவில், சேரனின் கை பிடித்தபடி கார்டன் ஏரியாவில் நடந்து கொண்டிருக்கிறார் அவரது மகள். அப்போது, லாஸ்லியாவிடம் இனி பேசக்கூடாது என சேரனுக்கு நிபந்தனை விதிக்கிறார் அவர். மீறி பேசினால் தான் பேசமாட்டேன் என அப்பாவிடம் கூறுகிறார் மகள்.

குழப்பத்தில் சேரன்

குழப்பத்தில் சேரன்

மகளின் இந்த நிபந்தனையால் குழப்பத்தின் உச்சிக்கு செல்கிறார் சேரன். பெத்த மகள் சொல்வதை கேட்பதா இல்லை தத்து மகளை பாதுகாப்பதாக என முடிவெடுக்க முடியாமல், இருகொள்ளி எரும்பு போல் ஆகிறார் அவர். சேரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X