வனிதாவை மாதிரியே சேரனையும் நம்ப வைத்து ஏமாற்றிய விஜய் டிவி.. செம கடுப்பில் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 3ல் வயதில் பெரியவராக இருக்கும் தான் வெற்றிப்பெற வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமலேயே வெளியேறிவிட்டார் சேரன்.

Recommended Video

Bigg Boss 3 Tamil | Promo3|Day91 | கண்ணீருடன் வெளியேறும் சேரன்

சென்னை: பிக் பாஸ் வீட்டில் சேரன் இவ்வளவு கஷ்டப்பட்டு தன் உழைப்பைக் கொடுத்தும், கடைசியில் அவரது ஆசை நிறைவேறாமலே போய் விட்டது.

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனிலுமே ஒரு அனுபவசாலியான மூத்த போட்டியாளர் இடம் பெறுவது வழக்கம் தான். ஆனால், சக போட்டியாளர்களுடன் அவர்கள் வெற்றிக்காக மல்லுக்கட்ட மாட்டார்கள். எப்போது வெளியே தப்பித்து ஓடலாம் என்ற ரேஞ்சிலேயே அவர்களது நடவடிக்கைகள் இருக்கும்.

பெரும்பாலான டாஸ்க்குகளில் தங்களின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவர்கள் தப்பித்துக் கொள்ளவே விரும்புவார்கள். ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு இந்த சீசனில் பல முரண்களை உடைத்தவர் சேரன்.

சேரன்

சேரன்

இவரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்கு செட் ஆவாரா என்ற விமர்சனங்களைத் தாண்டி கிட்டத்தட்ட வெற்றியின் இறுதி வரை இருந்து போராடி தோல்வியடைந்துள்ளார் சேரன். இந்த சீசனில் சக போட்டியாளர்களையும், மக்களையும் இன்ப அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைய வைத்தவர் அவர் தான் என்றால் மிகையில்லை.

நடுநிலைவாதி

நடுநிலைவாதி

வனிதா, கஸ்தூரி போன்றோர் பிக் பாஸ் வீட்டிற்கு வர, அங்கு தங்கி இருக்க முக்கியக் காரணமாக இருந்தவர் சேரன் தான். இதை அடிக்கடி அவர்களே தங்கள் வாயால் கூறிக் கொண்டே இருந்தனர். வீட்டில் நடந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் நடுநிலைவாதியாகவே சேரன் இருந்தார்.

சேரனின் ஆசை

சேரனின் ஆசை

மற்ற போட்டியாளர்களில் இருந்து வேறுபட்டு, எப்படியும் இந்த முறை டைட்டிலை ஜெயித்தே தீருவது என்ற தீர்க்கமான முடிவில் விளையாடினார் சேரன். கடந்த இரண்டு சீசன்களிலுமே இளம் வயதுக்காரர்களே டைட்டிலை வென்றனர். அந்த வரலாற்றை மாற்றி இம்முறை தான் வெல்ல வேண்டும் என அவர் கூறி வந்தார்.

உழைப்பு

உழைப்பு

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சி உடல் வலிமையைக் காட்டும் போட்டியாக மட்டும் இருக்கக்கூடாது, மன வலிமையையும் காட்ட வேண்டும் என தொடர்ந்து அவர் வலியுறுத்தி வந்தார். எனவே தன் உடல் நிலை ஒத்துழைக்காத போதும், தொடர்ந்து சக போட்டியாளர்களுடன் போராடி வெற்றிக்காக உழைத்தார்.

விஜய் டிவி

விஜய் டிவி

சமயங்களில் விஜய் டிவியும் சேரனுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதோ என சந்தேகப்படும் அளவிற்கு சில சம்பவங்கள் நடந்தது. அப்போதெல்லாம் சேரனுக்குத் தான் இம்முறை டைட்டில் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். சேரனும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் டைட்டில் தனக்குத் தான் வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

இளம் போட்டியாளருக்கே டைட்டில்

இளம் போட்டியாளருக்கே டைட்டில்

ஆனால், கடைசியில் அவரது ஆசை நிறைவேறாமலேயே அவர் வெளியேற்றப்பட்டு விட்டார். இம்முறையாவது மூத்த போட்டியாளருக்கு டைட்டில் கிடைக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டது. சேரன் வெளியேற்றத்திற்குப் பின், தற்போது வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே இளம் போட்டியாளர்கள் தான். எனவே, இம்முறையும் இளம் போட்டியாளர் ஒருவருக்குத் தான் டைட்டில் என்பது உறுதியாகி விட்டது.

வனிதாவின் ஏமாற்றம்

வனிதாவின் ஏமாற்றம்

முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முன் தன் மகனை அழைத்து வந்து காட்டுவார்கள் என வனிதா பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் கண்டெண்டுகளை அள்ளிக்கொடுத்த அவரது ஆசையை விஜய் டிவி நிறைவேற்றவே இல்லை. தற்போது சேரன் விவகாரத்திலும் அதேபோல் ஏமாற்றிவிட்டதாக அவரது ஆர்மியினர் வருத்தத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X