Don't Miss!
- Automobiles
வீலிங், சேஸிங்னு எதுவுமே பண்ண வேண்டாம்... இத ஓட்டிட்டு போனாலே உங்கள வச்சு கண்ணு வாங்காம பாப்பாங்க!
- News
ஓபிஎஸை இயக்குவது திமுக தான்.. அதிமுக பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் சிறந்த வாய்ப்பு.. விஜயபாஸ்கர்!
- Finance
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே.. இதைக் கொஞ்சம் கேளுங்க..! #பட்ஜெட் 2023
- Lifestyle
இந்த உணவுகளில் ஒன்றை காலையிலேயே சாப்பிடுவது உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்குமாம்!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Sports
திடீரென கீழே விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. ஒரு நிமிடம் அமைதியான மொத்த அரங்கம்.. இறுதியில் வந்த ட்விஸ்ட்
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ஹீரோ தர்ஷனை மெல்லமெல்ல வில்லனாக்கும் பிக் பாஸ்.. அப்போ டைட்டில்வின்னர் சேரன் தானா? கியாரே செட்டிங்கா
Recommended Video
சென்னை: இதுநாள் வரை பிக் பாஸ் வீட்டில் ஹீரோவாக வலம் வந்த தர்ஷனை மெல்ல மெல்ல வில்லனாக காட்டத் துவங்கியுள்ளார் பிக் பாஸ்.
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தர்ஷன். சொந்த வாழ்க்கையில் அவர் பட்ட கஷ்டத்தின் காரணமாகவும், பிக் பாஸ் வீட்டில் அவர் நடுநிலையாளராக இருப்பதை வைத்தும் அவரே இந்த சீசனின் டைட்டில் வின்னராக வேண்டும் என சக போட்டியாளர்களே கூறி வருகின்றனர்.
இதனால் வெளியில் உள்ள மக்கள் மனதிலும் தர்ஷன் ஹீரோவாகிப் போனார். முதன் முறையாக அவர் வனிதாவை எதிர்த்துப் பேசியது, ஷெரின், மீராவுடனான காதல் பிரச்சினையின் போது கண்ணியமாக நடந்து கொண்டது என மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு அதிகரிக்கும்படி பிக் பாஸ் வீட்டில் பல சம்பவங்கள் நடைபெற்றன.
நிஜ
மகள்
பேச்சால்
மனம்
மாறிய
சேரன்..
ஷெரின்
மீது
புதுப்பாசம்..
லாஸ்லியா
கீழ
விழுந்தப்பவும்
பதறலையே!

இனி வில்லன்
ஆனால், பிக் பாஸ் நினைத்தால் ஒரே நிமிடத்தில் ஹீரோவை வில்லனாக்கி விடுவார், வில்லனை ஹீரோவாக்கி விடுவார். இதற்கு நிறைய உதாரணங்களை ஏற்கனவே நாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறோம். பிக் பாஸ் வீட்டில் அராஜகம் செய்த பலரை, நல்லவர்களாக மக்கள் மத்தியில் காட்டி வெளியில் அனுப்பிய சம்பவங்கள் ஏராளம்.

தர்ஷனின் இன்னொரு முகம்
அதேபோல் வெளியில் நல்லவர்களாக கருதப்பட்ட பலரின் பெயரை டேமேஜ் செய்த புகழும் பிக் பாஸிற்கு உண்டு. தற்போதும் அதேபோல் தர்ஷன் மீதான மக்கள் கருத்தை மாற்ற பிக் பாஸ் முயற்சி செய்கிறாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு ஒத்துப் போவது போல் பிக் பாஸ் வீட்டிலும் சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

கடினமான டாஸ்க்குகள்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடந்து வருகிறது. இதில் வெற்றி பெறுபவர் நேரடியாக பைனலுக்கு சென்று விடுவார். இதற்காக முதன்முறையாக பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க்குகள் தரப்பட்டு வருகின்றன. ஆனால் முந்தைய டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடிய தர்ஷன், இவற்றை சரிவரச் செய்வதில்லை.

போராட்ட குணம்
ஏதாவது காரணம் கூறி, ஆரம்பத்திலேயே போட்டிகளில் இருந்து விலகி விடுகிறார். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இதுவரை பலசாலியாக கருதப்பட்ட தர்ஷனின் இந்த நடவடிக்கைகள் தற்போது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. கடைசி வரை போராடிப் பார்க்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடம் குறைந்து வருகிறது.

விட்டுக் கொடுத்த தர்ஷன்
கடந்த வாரம் கேப்டன் பதவிக்கான டாஸ்க்கில் லாஸ்லியாவிற்காக விட்டுக் கொடுத்தது போல், இம்முறையும் சக போட்டியாளர்களுக்காக அவர் விட்டுக் கொடுக்கிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது. ஆனால், அவரது நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, அவர் வில்லத்தனம் செய்வது போலவே இருக்கிறது.

சண்டை
நிறைய காட்சிகளில் அவர் கோபமாகவே தெரிகிறார். மற்றவர்களுடன் தேவையில்லாமல் சண்டை போடுகிறார். மக்கள் விமர்சிக்கும்படி பல சம்பவங்களைச் செய்கிறார். இதன் மூலம் ஹீரோவாகக் கருதப்பட்ட தர்ஷனை, வில்லனாக்கி விட்டு டைட்டிலை வேறொருவருக்குத் தர பிக் பாஸ் முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம் நெட்டிசன்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

டைட்டில் வின்னர்
ஆரம்பம் முதலே இந்த சீசன் வெற்றியாளர் சேரன் தான் என்ற பேச்சு பரவலாக உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் பிக் பாஸும் பல சலுகைகளை சேரனுக்கு வழங்கி இருக்கிறார்.அவற்றை வைத்துப் பார்க்கும் போது, இறுதிக்கட்டத்தில் உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனை வில்லனாக்கி, சேரனுக்கு டைட்டிலைத் தர பிக் பாஸ் முயற்சிக்கிறாரோ என சந்தேகிக்கப்படுகிறது.