“அசிங்கமா திட்டிடுவேன் பார்த்துக்க”.. கிண்டலடித்த லாஸ்லியாவிடம் கோபமாக பேசிய தர்ஷன்.. காரணம் கவின்?
லாஸ்லியாவிடம் தர்ஷன் கோபமாகப் பேசியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Recommended Video
சென்னை: கிண்டல் செய்த லாஸ்லியாவிடம் தர்ஷன் கோபமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலேவுக்கான டாஸ்க்குகள் நடைபெற்றன. இதில் போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக மோதிக் கொண்டனர். அதிலும் குறிப்பாக தங்கமுட்டை டாஸ்க்கில் ஒருவரது முட்டையை மற்றவர்கள் உடைக்க போட்டியாளர்கள் கடும் முயற்சிகளை எடுத்தனர்.
இந்நிலையில், இந்த டாஸ்க்கில் தர்ஷன் விளையாடிய விதம் குறித்து லாஸ்லியா, 'தர்மர்.. தர்மர்' என கிண்டல் அடித்தார். அப்போது லாஸ்லியாவிடம் தர்ஷன், 'அசிங்கமா திட்டிடுவேன் பார்த்துக்க' என கோபமாக பேசினார். இதனை கவினிடம் லாஸ்லியா பகிர்ந்து கொண்டார்.

கோபம்
அப்போது, ‘தான் ஜாலியாக கிண்டலுக்குத் தான் அப்படிக் கூறினேன். ஆனால் தர்ஷன் கோபமாகி திட்டி விட்டார்' என லாஸ்லியா கவினிடம் கூறினார். பிக் பாஸ் வீட்டில் தர்ஷனை தனது சகோதரன் என லாஸ்லியா குறிப்பிட்டு வருகிறார். தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் இலங்கையில் இருந்து வந்து பிக்பாஸில் பங்கேற்றுள்ளனர்.

கோபம்
சமீபகாலமாக தர்ஷனை பிக் பாஸில் வில்லனாக்க முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு இருந்து வருகிறது. காரணம் இதுவரை அவர் அதிகம் பிக் பாஸ் வீட்டில் கோபப்பட்டது கிடையாது. ஆனால், சமீபகாலமாக அவர் கோபப்படுவது போன்ற காட்சிகள் அதிகம் பிக் பாஸில் காட்டப்படுகின்றன.

கமல் அறிவுரை
கமலும் கூட நேற்று தர்ஷனுக்கு கோபத்தைக் குறைத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறினார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இன்னும் பிக் பாஸ் முடிய சில நாட்களே உள்ள நிலையில் தர்ஷனை ரன்னர் அப் ஆக்க திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகமே வருகிறது.

கவின் தான் காரணம்
கடந்த வாரம் கவினிடம் கூட தர்ஷன் கோபமாக சண்டை போட்டார். கவினும், லாஸ்லியாவும் பேசிக் கொண்டிருந்த போதும், அவர் அப்படித்தான் கோபமாகப் பேசினார். இதன் மூலம் கவினுடன் லாஸ்லியா பேசுவது பிடிக்காமல் தான் தர்ஷன் இப்படி நடந்து கொள்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











