காதல் விவகாரம்:கவினை திட்டி வீடியோ.. விதிகளை மீறினாரா சாக்‌ஷி.. மது போலவே கேஸ் போட பிக் பாஸ் முடிவு?

Recommended Video

Sakshi Emotional speech about kavin

சென்னை: கவினை திட்டி வெளியிட்ட வீடியோவை சாக்‌ஷி உடனடியாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார்.

இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த போதே, முக்கோணக் காதல் கதை கன்பார்ம் என நாம் ஒரு செய்தி வெளியிட்டோம். அது உண்மை என்பது போல, அபி காதலித்த கவினையே சாக்‌ஷியும் காதலித்தார். ஆனால், இந்தக் காதல் கதையில் எதிர்பாராத திருப்பமாக, அபியின் கவனம் முகென் பக்கம் திரும்ப, கவின் - சாக்‌ஷிக்கு இடையே பிரச்சினையாக வந்து சேர்ந்தார் லாஸ்லியா.

இந்த விவகாரம் பிக்பாஸில் பல வாரங்களாக பிரச்சனையை ஏற்படுத்தி வந்தது. சாக்‌ஷி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபிறகு தற்போது கவின் மற்றும் லாஸ்லியா மிக நெருக்கமாக உள்ளனர்.

சாக்‌ஷி விவகாரம்

சாக்‌ஷி விவகாரம்

ஆனாலும், இன்னமும் பிக் பாஸ் வீட்டில் சாக்‌ஷியின் பெயர் ஒலித்த வண்ணம் தான் உள்ளது. எந்தவொரு பிரச்சினை என்றாலும், அதில் கவின், சாக்‌ஷி பிரச்சினையை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார்கள். நேற்றும் கூட, சாக்‌ஷி பற்றி கவினிடம் சில கேள்விகளை எழுப்பினார் வனிதா.

கவின் விளக்கம்

கவின் விளக்கம்

அப்போது, சாக்‌ஷி தன்னைக் காதலிப்பதாகக் கூறி விளையாடுகிறாரோ என ஒரு கட்டத்தில் சந்தேகப் பட்டதாக கூறினார் கவின். அதோடு, சாக்‌ஷி தான் தன்னைக் காதலித்தது போலவும், தான் விளையாட்டுக்குத் தான் அவருடன் பழகியதாகவும் சக போட்டியாளர்களிடம் கவின் தெரிவித்தார்.

வீடியோ

வீடியோ

இந்த எபிசோடைப் பார்த்து கடும் கோபமடைந்த சாக்‌ஷி, தனது டிவிட்டர் பக்கத்தில் கவினைத் திட்டி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் கவினிடம் அவர் மூன்று கேள்விகளை முன்வைத்தார். ‘பிக் பாஸ் வீட்டில் யார் யாரிடம் முதலில் ப்ரொபோஸ் செய்தார்கள் என்பது மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சக போட்டியாளர்களுக்குத் தெரியும்' என அவர் பேசியிருந்தார்.

திருமண ஆசை

திருமண ஆசை

அதோடு, கவின் தான் திருமணம் செய்துகொள்வது போல பேசினார் என்றும் அவர் கூறியுள்ளார்."ஷெரினிடம் கவின் 'நீ சாக்ஷியை பார்க்க வேண்டும் என்றால் என் வீட்டில் தான் வந்து பார்க்கவேண்டும். அவர் என் வீட்டில் தான் இனி இருக்கப்போகிறார்' என சொன்னது கவின் தான். என்னை பல இடங்களில் அதிகம் கத்தியுள்ளார். அதை எல்லாம் காட்டவில்லை" என சாக்‌ஷி குற்றம் சாட்டியிருந்தார்.

உடனடி நீக்கம்

உடனடி நீக்கம்

சாக்‌ஷியின் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை சாக்‌ஷி உடனடியாக இந்த வீடியோவை தனது பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார். என்ன காரணத்தினால் தான் கோபமாக வெளியிட்ட வீடியோவை அவர் நீக்கினார் என்பது தெரியவில்லை.

சர்ச்சை

சர்ச்சை

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள், அங்கு நடக்கும் சாதாரண விசயங்கள் குறித்து தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். சர்ச்சை சம்பவங்கள் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. அப்படி இருக்கையில் சாக்‌ஷியின் இந்தப் பதிவு ஒருவேளை இதுவும் பிக் பாஸ் விதிகளுக்கு முரணானதாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மது விவகாரம்

மது விவகாரம்

முன்னதாக தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டு பிக் பாஸில் இருந்து வெளியேறிய மது, விதிகளை மீறி பணம் கேட்டு நச்சரிப்பதாக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் சாக்‌ஷி தனது வீடியோவை அதிரடியாக நீக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவைப் போலவே சாக்‌ஷி மீதும் பிக் பாஸ் வீட்டு ரகசியங்களை உளறியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X