சாதுர்யமாக தூக்கப்பட்ட கவின், தர்ஷன்.. ‘செல்லப் பிள்ளை’க்காக சதி செய்த பிக் பாஸ்.. சாணக்கிய தந்திரம்

சாண்டி தான் இம்முறை டைட்டிலை வெல்வார் எனக் கூறப்படுகிறது.

Recommended Video

Bigg Boss Tharshan : வெளியேறிய தர்ஷனுக்கு மக்கள் வரவேற்பு-வீடியோ

சென்னை: பைனலில் உள்ள போட்டியாளர்களைப் பார்க்கும் போது பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது.

ஒரு வழியாக இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடியப் போகிறது. பைனலுக்கு வருவார்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவினும், தர்ஷனும் கடந்த வாரம் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

தற்போது பைனலில் ஷெரீன், லாஸ்லியா, சாண்டி மற்றும் முகென் உள்ளனர். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதைப் போல, டைட்டிலும் நிச்சயம் மக்கள் எதிர்பார்க்காத ஒருவருக்குத் தான் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

சின்னத்திரை சாணக்கியர்

சின்னத்திரை சாணக்கியர்

நிச்சயம் பிக் பாஸை ஒரு சின்னத்திரை சாணக்கியர் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு திட்டமிட்டு இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப் போகிறார். வீட்டிற்கு உள்ளே மட்டுமின்றி வெளியேயும் பல பரபரப்புகளை நடத்திக் காட்டி, இலவச விளம்பரங்களை வாங்கி விட்டார்.

மறைமுக பங்களிப்பு

மறைமுக பங்களிப்பு

ஏறக்குறைய கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக மக்களின் பேச்சு பெரும்பாலும் பிக் பாஸ் வீட்டைச் சுற்றித் தான் இருந்தது என்றால் மறுக்க இயலாது. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை தங்களுக்கு நெருக்கமானவர்களாக கருதிக் கொண்டு, மக்கள் தங்களையும் ஒரு போட்டியாளராகக் கருதி தான் மறைமுகமாக விளையாடி வந்தார்கள்.

வாக்குகள் போர்வை

வாக்குகள் போர்வை

ஆனால் மக்கள் நம்பியது போல் எதுவும் அவர்களது எண்ணம் போல் நடக்கவில்லை. மக்களின் வாக்குகள் என்ற போர்வையில் பிக் பாஸ் நடத்திய காய்கள் தான் அவை. பிக் பாஸ் போட்டியாளர்களின் வெளியேற்றமே அதற்கு சாட்சி. மீண்டும் வனிதா நிகழ்ச்சிக்குள் வந்ததுகூட அப்படித்தான்.

தர்ஷன் வெளியேற்றம்

தர்ஷன் வெளியேற்றம்

இம்முறை ஆரம்பத்தில் இருந்தே டைட்டில் வின்னராக கருதப்பட்டு வந்தவர் தர்ஷன். எப்படியும் அவர் பைனலுக்கு செல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக வெளியேற்றப்பட்டு அதிர்ச்சி தந்துள்ளார். அதேபோல் சமூகவலைதளத்தில் தனக்கென பெரும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர் கவின்.

கவின் முடிவு

கவின் முடிவு

அவரும் கடந்தவாரம் ஐந்து லட்ச ரூபாயுடன் வெளியேறி விட்டார். கடந்த 12 வாரங்களாக நாமினேசனுக்கு வந்து, மக்களால் அதிக வாக்குகள் தந்து காப்பாற்றப்பட்டவர் கவின் தான். நிச்சயம் இந்த வாரமும் அவர் காப்பாற்றப் பட்டிருப்பார். ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல் அவரையும் பிக் பாஸ் வெளியேற்றி விட்டார்.

நம்பும்படி இல்லை

நம்பும்படி இல்லை

நிஜமாகவே ஐந்து லட்ச ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் என்பதற்காகத் தான் கவின் வெளியேறினார் என்பது நம்பும் படி இல்லை. ஏனென்றால் ஐந்து லட்ச ரூபாய்க்கு போட்டியாளர்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில், தொகையை பிக் பாஸ் அதிகரித்துக் கொண்டே செல்வார் என்பது கடந்த சீசன்களில் நாம் பார்த்த ஒன்று தான்.

பணம் தான் முக்கியமா?

பணம் தான் முக்கியமா?

அதுவும் அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த தொகை அதிரடியாக அதிகரிக்கும். இதை நன்கு உணர்ந்த கவின் பணம் தான் முக்கியம் என்றால், இன்னும் சில மணி நேரங்கள் காத்திருந்து, இன்னும் சில கூடுதல் லட்சங்களுடன் வெளியேறி இருக்கலாம். ஆனால் அவசர அவசரமாக அவர் வெளியேறி விட்டார்.

செல்லக்குட்டி சாண்டி

செல்லக்குட்டி சாண்டி

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, தன் செல்லக்குட்டி சாண்டியை டைட்டில் வின்னராக்கத் தான் பிக் பாஸ் இப்படி காய் நகர்த்துகிறாரோ என்ற சந்தேகம் நமக்கு வருகிறது. ஏனென்றால் விஜய் டிவிக்கும், சாண்டிக்கும் உள்ள நெருக்கம் ஏற்கனவே நாமறிந்தது தான். பிக் பாஸ் வீட்டில் அதிகம் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதவரும் சாண்டி தான்.

பலமான போட்டியாளர்கள்

பலமான போட்டியாளர்கள்

நிச்சயம் பைனலுக்கு சாண்டியுடன் கவினோ அல்லது தர்ஷனோ களமிறங்கும் பட்சத்தில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக் குறி தான். எனவே தான், பலமான போட்டியாளர்களான தர்ஷனையும், கவினையும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டு, சாண்டியுடன் முகென், ஷெரின் மற்றும் லாஸ்லியாவை ஓட விட்டுள்ளார் பிக் பாஸ்.

டைட்டில் வின்னர்

டைட்டில் வின்னர்

கோல்டன் டிக்கெட் பெற்றவர்கள் பைனலுக்கு வருவார்களே தவிர, இதுவரை தமிழில் டைட்டில் வென்றதில்லை. இம்முறையும் அது அவ்வளவாக சாத்தியமில்லை. கவின் வாக்குகள் சாண்டி மற்றும் லாஸ்லியா என இரண்டாகப் பிரிந்து விடும். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் சாண்டி தான் இம்முறை டைட்டில் வின்னர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X