டிக்கெட் டு பினாலே நிச்சயம் சேரனுக்கு இல்லை.. புது ஸ்கெட்ச் போடும் பிக் பாஸ்.. இந்த வாரம் எவிக்ட்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெறும் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இயக்குனர் சேரன் வெற்றி பெறுவது கடினம் என்றே கூறப்படுகிறது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 86 : Cheran Strategy

சென்னை : டிக்கெட் டு பினாலே நிச்சயம் சேரனுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது. அதனால் இந்த வாரம் அவர் வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. பிக் பாஸ் சொன்னது போல, இனி வாரங்களில் அல்ல, நாட்களிலேயே நிகழ்ச்சி இருக்கப் போகிறது. தற்போது நிகழ்ச்சியில் உள்ள ஏழு போட்டியாளர்களுமே முக்கியமானவர்கள் என்பதால், அடுத்து யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் உள்ளது.

அதிலும் இந்த வாரம் டிக்கெட் டு பினாலேவுக்காக டாஸ்க்குகள் நடத்தப்படுகின்றன. முந்தைய சீசன்களில் எல்லாம் தரப்பட்டதோடு ஒப்பிடுகையில் இம்முறை மிகவும் எளிதான போட்டிகளே தரப்படுகின்றன.

திணறும் சேரன்

திணறும் சேரன்

ஆனால், அவற்றில் கலந்து கொள்வதற்கே சேரன் திணறுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இது அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவரது வயது மற்றும் உடல்நிலை ஒரு காரணம். அதோடு அவரது படங்களிலும்கூட அவர் பெரும்பாலும் ஆக்சன் காட்சிகளில் நடித்ததில்லை. மென்மையான கதாபாத்திரங்களிலேயே வருவார்.

பலூன் டாஸ்க்

பலூன் டாஸ்க்

அதனால் நேற்று காலில் பலூன் கட்டிக்கொள்ளும் டாஸ்க்கிலேயே மிகவும் கஷ்டப்பட்டார் சேரன். அவரே தன் காலால் தன்னுடைய பலூனை எதிர்பாராத விதமாக உடைத்து விட்டார். அவருக்கு அந்த விளையாட்டை எப்படி விளையாடுவதென்று தெரியவில்லை. அதோடு மற்ற அனைத்து போட்டியாளர்களுமே இளவயதுக்காரர்கள்.

கடினமான டாஸ்க்குகள்

கடினமான டாஸ்க்குகள்

அவர்களோடு மோதுவது நிச்சயம் சேரனுக்கு சவாலான விசயம் தான். இது நேற்று ஒருநாளிலேயே வெளிப்படையாகத் தெரிந்தது. இதை வைத்துப் பார்க்கும் போது, நிச்சயம் இனி வரும் டாஸ்க்குகள் இதை விடக் கடினமாகத்தான் இருக்கும். எனவே, அவற்றை சேரன் விளையாடி ஜெயிப்பது ரொம்பக் கஷ்டம்.

நேரடியாக பைனல்

நேரடியாக பைனல்

ஒருவேளை பிக் பாஸ் வழக்கம் போல் ஏதாவது உட்டாலங்கடி வேலை பார்த்து, சேரனுக்கு டிக்கெட் டு பினாலே தருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி தரும் பட்சத்தில் அவர் இனி வரும் கடினமான டாஸ்க்குகள் எதிலும் அவ்வளவாக விளையாடாமல் நேரடியாக பைனலுக்கு சென்றுவிடலாம்.

ஷெரின்

ஷெரின்

இது நடக்காதபட்சத்தில், இந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் அவரோடு நாமினேசனில் இருந்தவர்களே இம்முறையும் உள்ளனர். அப்போதும் ஷெரினைவிட குறைவான வாக்குகளைப் பெற்றே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் உறுதி

இந்த வாரம் உறுதி

சீக்ரெட் ரூம் டாஸ்க் மூலம் அப்போது சேரனை பிக் பாஸ் காப்பாற்றி விட்டார். ஆனால், மீண்டும் அதே போல் இம்முறையும் செய்ய வாய்ப்புகள் குறைவு. எனவே, சேரனுக்கு டிக்கெட் டு பினாலே கிடைக்காத பட்சத்தில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறுவது ஏறக்குறைய உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X