தர்ஷன் வெளியேற்றம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. விஜய் டிவிக்கு எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக்!

தர்ஷன் வெளியேற்றப்பட்டுவிட்டதாக வெளியான தகவலை அடுத்து, விஜய் டிவி மற்றும் கமலுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Recommended Video

லாஸ்லியாவுக்காக வெளியேற்றப்பட போகும் தர்ஷன்... ஷாக் தரும் பின்னணி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டுவிட்டதாக வெளியான தகவலை அடுத்து, விஜய் டிவி மற்றும் கமலுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது. கடந்த 100 நாட்களாக ஒளிபரப்பான நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிகிறது. இதனால் பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள் போட்டியாளர்களும் ரசிகர்களும்.

பிக் பாஸ் வீட்டில் தற்போது சாண்டி, லாஸ்லியா, முகென், தர்ஷன், ஷெரின் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் முகென் கோல்டன் டிக்கெட் மூலம் இறுச்சுற்றுக்குள் நேரடியாக நுழைந்துவிட்டார். நேற்றைய எபிசோடில் சாண்டி காப்பாற்றப்பட்டுவிட்டார்.

ஷெரின் வெளியேறினாரா?

ஷெரின் வெளியேறினாரா?

இன்றைய எபிசோடில் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் நபர் யார் என்பது தெரிந்துவிடும். லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் ஆகிய மூவரில் ஒருவர் தான் வெளியேறப் போகிறார்கள். இந்த மூவரில் ஷெரின் தான் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார் என கூறப்படுகிறது. அதனால் அவர் தான் இந்த வாரம் எவிக்ட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எவிக்டான தர்ஷன் ?

எவிக்டான தர்ஷன் ?

ஆனால் தர்ஷன் எவிட்டாகிவிட்டதாக நேற்றிரவு செய்தி பரவியது. இது பிக் பாஸ் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிக மக்கள் செல்வாக்கு உடைய தர்ஷனை வெளியேற்றி இருப்பதாக சொல்லப்படுவதால், விஜய் டிவி மற்றும் கமலை ரசிகர்கள் திட்டி வருகின்றனர். #redlightchannelvijaytv எனும் ஹேஷ்டேக் நேற்று இரவில் இருந்து டிவிட்டரில் டிரெண்டிங்காகி உள்ளது. அந்த ஹேஷ்டேக்கில் விஜய் டிவி மற்றும் கமலை ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

நீதி வேண்டும்

"சேரன் மற்றும் தர்ஷனுக்கு நீதி வேண்டும். ஷெரினுக்கு நாங்கள் வாக்களிக்க போகிறோம். யாருடைய ஆதரவும் இல்லாமல் ஷெரின் பைனல்ஸ் வந்துள்ளார். ஷெரினை பைனல்ஸ் வரவிடாமல் சாண்டி, லாஸ்லியா மற்றும் கவின் தடுக்க முயற்சித்தனர். அவர் தான் உண்மையான சிங்கப்பெண்", என இவர் பதிவிட்டுள்ளார்.

முதல்முறையாக அழுதேன்

"மக்களிடையே தர்ஷனுக்கு எத்தனை ஆதரவு உள்ளது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. ஒரு கடுமையான உழைப்பாளி மற்றும் நேர்மையான இளைஞன் தர்ஷன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். கடந்த மூன்று சீசன்களில் இப்போது தான் முதல்முறையாக எவிக்ஷனுக்காக அழுதேன்", என இவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகம்

சந்தேகம்

தர்ஷன் உண்மையில் வெளியேற்றப்பட்டு விட்டாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இன்றைக்கு இரவு ஒளிபரப்பாகும் எபிசோடில் தான் அது தெரியவரும். அதற்குள்ளாக இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X