இப்டியெல்லாம் புரொமோ போடாதீங்க பிக் பாஸ்.. அப்புறம் அழுதுருவோம்.. கதறும் கவிலியா ரசிகர்கள்!
கவிலியா காதல் பிரிவால் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சோகமாக உள்ளனர்.
Recommended Video
சென்னை: கவின் வெளியேற்றத்தால் லாஸ்லியா உடைந்து போய் கதறி அழுவதை பார்த்து கவிலியா காதல் ரசிகர்கள் டிவிட்டரில் சோக கீதம் பாடி வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு ஜோடி காதலில் விழுந்து கசிந்துருகுவது வழக்கம் தான். ஆனால் முந்தைய சீசன்களில் இல்லாத அளவிற்கு இம்முறை கவின் லாஸ்லியா காதல் மக்களிடையே அதிக ஆதரவை பெற்றிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் கவின் லாஸ்லியா பிரிவை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
தங்களது மன வருத்தத்தை சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ப்ளீஸ் பிக் பாஸ்
இப்படி எல்லாம் வீடியோ போடாதீங்க ப்ளீஸ் பார்க்க முடியல என இந்த ரசிகர் கேட்டுள்ளார். கவினும், லாஸ்லியாவும் கதறி அழுவதை, அவர்கள் காதல் பிரிவை நினைத்து மனக் கஷ்டப்பட்டு இந்த ரசிகர் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் கோரிக்கை
ப்ளீஸ் அப்படி செய்யாதீங்க. திரும்ப வந்திடுங்க கவின் என இவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு போட்டியாளரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போது இப்படி அவர்களது ரசிகர்கள் கதறுவது வாடிக்கை தான். ஆனால் கவினுக்கு அது கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.
உண்மையான வெற்றியாளர்
"கண்ணீரை எல்லாம் எழுத முடியாது. கடைசியா நான் அழுதது 2017ம் ஆண்டு. நேற்று மதியம் 3 மணியில் இருந்து கவினை நினைத்து நான் எத்தனை முறை அழுதிருப்பேன் என எனக்கே தெரியாது. இந்த வீட்டின் சிறந்த போட்டியாளார் நீ. உன்னை நிறைய பேர் நேசிக்கிறார்கள். எங்களுக்காக நீ சந்தோஷமாக வாழு. நீ தான் உண்மையான வெற்றியாளர்" என இவர் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் வேதனை
"உன்னை எவ்வளவோ கேலி செய்திருக்கிறேன். ஆனால் திடீரென நீ வெறியேறியது கஷ்டமாக போச்சு" என இவர் வேதனைபட்டுள்ளார். இவர் மட்டுமல்ல இவரைப் போலவே கவினையும், லாஸ்லியாவையும் திட்டிய நிறைய நெட்டிசன்கள் தற்போது மனம் மாறி அவர்களுக்காக வேதனை தெரிவித்துள்ளனர்.
முட்டாள் கவின்
"கவின் நீ ஓரு உணர்ச்சிகரமான முட்டாள். நீ எங்கள மறந்திட்ட. ஒரு தோல்வியால் தனது எதிரிகளை தோற்றகடித்த ஒருவனை நான் இன்று பார்த்தேன். உன்னுடைய இளவரசியை பாதுகாக்க என்னால் முடிந்ததை செய்வேன்" என இவர் உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











