தட் பீதி மொமெண்ட்.. கவின் ரியாக்ஷன் பார்த்து சிரிச்சே செத்துட்டேன் பிக் பாஸ்.. நெட்டிசன்ஸ் மரணகலாய்!

பிக் பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் மீண்டும் சென்றுள்ளனர்.

Recommended Video

Watch Video : Mohan vaidhya,sakshi,abi Re-entry to bigg boss

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி மீண்டும் சென்றிருப்பது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி மீண்டும் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூன்று பேரும் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாக சென்றுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதமாக கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக கவினை செமையாக கிண்டலடித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

சிரிச்சே செத்துட்டேன்

"புரொமோவில் கவின் ரியாக்ஷன் பார்த்து சிரிச்சே செத்துட்டேன். அடக்கடவுளே செத்தேன் டா என்பது போல் உள்ளது கவினின் ரியாக்ஷன்", என இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் கன்பார்ம்

"இன்னைக்கு ஒரு பெரிய சம்பவம் காத்திருக்குடோய். கவின், லாஸ்லியா காலி இன்னைக்கு", என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். கவினின் ரியாக்ஷனை பார்த்து, 'தட் பீதி மொமெண்ட்' என ஒருவர் தெரிவித்துள்ளார்.

போக வேண்டியது தானே

நேற்றைய எபிசோடில் வனிதா உடனான சண்டையின் போது, இப்போது கதவை திறந்து வைத்தால் தான் வெளியே போய்விடுவதாக கவின் கூறினார். இது டிவிட்டரில் டிரெண்டிங்கானது. இதனை சுட்டிக்காட்டும் வகையில், "இப்ப தான் கதவை திறந்தாங்களே உடனே வெளிய போக வேண்டியது தானே கவின்", என இவர் கேட்டுள்ளார்.

மதுமிதா, சரவணன்

மதுமிதா, சரவணன்

"விஜய் டிவி நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே. எங்க மதுமிதாவையும், சரவணனையும் இதேபோல கூப்பிடுங்க பார்ப்போம்" என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

வேலைய ஆரம்பித்த சாக்ஷி

வேலைய ஆரம்பித்த சாக்ஷி

"இது நியாயமே இல்ல. ஷெரீன் நீ இந்த கேமை ஜெயிக்கணும். பேசுவோம்னு சாக்ஷி சொல்லுறாங்க. வந்த உடனே சகுனி வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. வெளிய இருந்து பார்த்துட்டு போய் அட்வைஸ் பண்ணினா எதுக்கு 100 நாட்கள் டிவி, போன் இல்லாம இருக்கனும். எல்லாம் கொடுக்கலாமே. பிக் பாஸ் உங்க ரூல்ஸை நீங்களே உடைக்குறீங்க", என இவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X