'வனிதா சகவாசம் குலநாசம்.. உங்களுக்கு வந்தா ரத்தமா'.. ஷெரினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

வனிதா - ஷெரின் சண்டையை வைத்து ரசிகர்கள் பல்வேறு விதமாக கருத்த கூறி வருகிறார்கள்.

Recommended Video

Watch Video : Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 74

சென்னை: வனிதா - ஷெரின் மோதலை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவில் வனிதாவுக்கும், ஷெரினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது காட்டப்பட்டுள்ளது. தர்ஷன் - ஷெரின் உறவு குறித்து தவறாக பேசுகிறார் வனிதா. இதை கேட்டு டென்ஷனான ஷெரின், வனிதாவை சகட்டுமேனிக்கு திட்டுகிறார்.

இதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி இடைந்துள்ளனர். இதுவரை நாள் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பிரச்சினைகளுக்கு வனிதா தான் காரணமாக இருந்தார். அவருக்கு பக்க பலமாக இருந்தது ஷெரின் தான்.

உச்சக்கட்ட பிரச்சினைகள்

உச்சக்கட்ட பிரச்சினைகள்

எனவே இதுநாள் வரை ஷெரினை வம்புக்கு இழுக்காமல் இருந்தார் வனிதா. நெங்கிய தோழி என்ற காரணத்தினால் அவரை மட்டும் விட்டு வைத்திருந்தார். ஆனால் இன்று ஷெரினையும் ஒருகை பார்த்துவிட்டார் வனிதா. இதனால் பிக் பாஸ் வீட்டில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது பிரச்சினைகள்.

குல நாசம்

இந்த புரொமோ குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமாக கருத்து கூறி வருகிறார்கள். அவற்றில் சில வற்றை பார்க்கலாம். " வனிதா சகவாசம் குல நாசம். கவின் லாஸ்லியாவுக்கு வந்தா தக்காளி சட்னியா.. ஷெரினுக்கு இப்போது புரிந்திருக்கும்", என இவர் குறிப்பிட்டுள்ளார். இவர் கவின், லாஸ்லியாவின் ரசிகை என்பதால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அய் சண்ட சண்ட

" அய் சண்ட சண்ட.. கும் கும்.. சண்ட அதை ஊரே வேடிக்கை பார்க்குது. வனிதா சொல்வதில் கொஞ்சம் உண்மை இல்லாமல் இல்லை. பார்க்காத வீடியோ ஒன்று போடலாம் போல. ஆனா நான் போட மாட்டேன்", என இவர் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல், தினமும் இதே வேலையாக கருத்து கூறி வரும் ரசிகர் இவர் என்பது கூடுதல் தகவல்.

உண்மையான நண்பர்கள்

"சாக்ஷி, வனிதா போல் நல்ல உள்ளம் கொண்ட, அன்பான, உண்மையானவர்களுடன் பழகினால் இது நான் நடக்கும் ஷெரின். இப்போது பார்க்கலாம் இந்த நட்பை நீங்கள் பாராட்டுகிறீர்களா என்று? நிச்சயம் அந்த ஐந்து பேர் கேங் உங்களுக்கு ஆதரவாக நிற்பார்கள்", கருத்து கூறியிருக்கிறார் இவர். இந்த கமெண்ட் ஷெரின் காதுக்கு எட்டினால் அவருக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

போட்டுக்கொடுத்த வனிதா

"வெளியில் இருந்தா நான் அவனை திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டேன் என ஷெரின் சொன்னதை, தர்ஷனிடம் வனிதா போட்டுக்கொடுத்துவிட்டார் போலும். என்னக்கா டபுள்சைட் கேமா? கவின், லாஸ்லியா எப்படி இன்னும் நெருக்கமானாங்கன்னு இப்போ புரியுதா?" என இவர் குறிப்பிட்டுள்ளார். அங்கு நடப்பதெல்லாம் டிராமாதான் என்பது இவருக்கு தெரியாது என பலரும் பதில் அளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X